இந்திய மகளிர் அணியின் முன்னோடியான அதிதி சௌஹான் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னோடியும் முன்னாள் கோல்கீப்பருமான அதிதி சௌஹான்(32) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாகக் கால்பந்து விளையாடி வரும் அதிதி, ஐரோப்பாவில் கிளப் கால்பந்து விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் 2012, 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற சீனியர் அணிகளில் ஒருவராக இருந்தார்.
தனது ஓய்வு குறித்து அதிதி சமூக வலதளப்பக்கத்தில் தெரிவித்ததாவது; "நன்றி, கால்பந்து - என்னை வடிவமைத்ததற்கும், என்னை சோதித்ததற்கும், என்னை வழிநடத்தியதற்கும். மறக்க முடியாத 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் தொழில்முறை கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.