20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி தேசிய விளையாட்டு கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் 2026 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வீரர் - வீராங்கனைகள் தேர்வு உள்ளிட்ட இறுதி செயல்பாடுகளை 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள், இறுதி செய்யுமாறு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSFs) செயலாளர் ஹரி ரஞ்சன் ராவ் வியாழக்கிழமை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேசிய விளையாட்டு தினம் மற்றும் ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்தநாள் தினமான ஆகஸ்ட் 29க்குள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வுத் திட்டத்தை முடிக்கலாம். இதைச் செய்தால் நமக்கு ஒரு முழு ஆண்டு தயாரிப்புக்கான நேரம் கிடைக்கும்” என ஹரி ரஞ்சன் ராவ் கூறினார்.ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் 2026 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வீரர் - வீராங்கனைகள் தேர்வு உள்ளிட்ட இறுதி செயல்பாடுகளை 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள், இறுதி செய்யுமாறு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSFs) செயலாளர் ஹரி ரஞ்சன் ராவ் வியாழக்கிழமை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேசிய விளையாட்டு தினம் மற்றும் ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்தநாள் தினமான ஆகஸ்ட் 29க்குள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வுத் திட்டத்தை முடிக்கலாம். இதைச் செய்தால் நமக்கு ஒரு முழு ஆண்டு தயாரிப்புக்கான நேரம் கிடைக்கும்” என ஹரி ரஞ்சன் ராவ் கூறினார்.
பார்சிலோனாவின் 10ஆம் எண்ணை லாமின் யமால் கைப்பற்றினார்
கிளப் கால்பந்து உலகில் நட்சத் திர அணியாக இருப்பது பார் சிலோனா ஆகும். ஸ்பெயின் நாட்டு கிளப் அணியான பார்சிலோனா விற்காக நீண்ட காலம் விளையாடிய அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, அந்த அணியில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்கா கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் பார்சிலோனாவில் மெஸ்ஸி யின் 10ஆம் எண் (ஜெர்சி நம்பர்) காலி யாக உள்ளது. இந்நிலையில், பார்சிலோனாவின் 10ஆம் எண்ணை லாமின் யமால் (18 வயது - ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர்) கைப்பற்றினார். 2023ஆம் ஆண்டி லிருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும், யமால் அடுத்த 6 ஆண்டுகள் (2031 வரை) 10ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளை யாடுவார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் கை யெழுத்திட லாமின் யமால் தனது பாட்டி யை அழைத்து வந்தார். முதன்முத லாக பார்சிலோனாவின் பயிற்சி கூட மான “லா மசியாவில்” இவரைச் சேர்த்தது முதல் இவரது பாட்டி உடன் இருந்திருக்கிறார். அதனால், அவரை வரவழைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார் லாமின் யமால்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரஸல்
கிரிக்கெட் உலகின் அதிரடி வீரர் களில் ஒருவரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆந்த்ரே ரஸல் (37) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக் காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல், ஜமைக்கா வில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடை பெறவுள்ள டி-20 தொடருடன் அவர் ஓய்வுபெறவுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி-20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கு இந்தி யத் தீவுகள் அணிக்கு பின்னடை வாக அமையும் என எதிர்பார்க்கப்படு கிறது. ரஸல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 84 டி-20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.