இந்தியாவில் செஸ் உலகக்கோப்பை அக்டோபர் 30இல் நடைபெறுகிறது
2025ஆம் ஆண்டுக்கான செஸ் உலகக்கோப் பை போட்டிகள் இந்தியாவில் நடை பெறும் என உலக சதுரங்க சங்கம் (FIDE) அறிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிகள் 2025 அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நகரம் விரைவில் அறிவிக்கப்படும் என உலக சதுரங்க சங்கம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. இதுதொடர்பாக உலக சதுரங்க சங்க தலைமை செயல் அதிகாரி சுடோவ்ஸ்கி கூறுகையில், “இந்தியாவில் செஸ் உலகக்கோப்பை நடத்த மிகவும் மகிழ்ச்சியாக உள் ளோம். இந்தியாவின் சதுரங்க ஆர்வலர் களின் உத்வேகம் அருமையானது. போட்டியுடன் கூடுதலாக பல சிறப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய உள்ளோம்” என அவர் கூறினார். இந்தியாவில் கடந்த 3 ஆண்டு களில் செஸ் ஒலிம்பியாட் 2022 (தமிழ்நாடு), டாடா ஸ்டீல் செஸ் இந்தியா, உலக ஜூனியர் யு-20 சாம்பியன்ஷிப் 2024, மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 5ஆவது லெக் (ஏப்ரல் 2025) உள்ளிட்ட சர்வ தேச செஸ் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. இதன் வரிசை யில் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியா வில் செஸ் உலகக்கோப்பை போட்டி கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து
விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இத்தாலி அணியை எதிர்கொள்கிறது. மீண்டும் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தில் இங்கிலாந்து அணியும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இத்தாலி அணியும் என இரு அணிகளும் இறுதிப்போட்டி மீது குறியாக களமிறங்குவதால், முதல் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து - இத்தாலி
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : ஸ்டேட் டி ஜெனீவ் மைதானம், சுவிஸ்
சேனல் : பேன் கோடு (ஓடிடி)
“கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரித்து வையுங்கள்” இந்திய வீரர்களுக்கு பாக்., முன்னாள் கேப்டன் அப்ரிடி அறிவுரை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம்சாட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக லெஜெண்ட்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டோம் இந்திய வீரர்கள் சிலர் விலகினர். இதனால் ஞாயிறன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது. இந்திய வீரர்களின் இத்தகைய இழிவான செயல்பாட்டிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி,”கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரித்து வையுங்கள், நாம் இங்கே கிரிக்கெட் ஆட வந்துள்ளோம். வீரர்கள் நாட்டின் தூதுவர்களாகச் செயல்பட வேண்டுமே தவிர தர்ம சங்கடமாக மாறிவிடக் கூடாது. மேலும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட விரும்ப வில்லை, எனில் தொடருக்கு வருவதற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். வந்து விட்டு விளையாட மறுப்பது தவறானது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.