games

img

விளையாட்டு

நடக்க முடியாமல் அவதிப்படும் “உலகின் அதிவேக மனிதன்

தடகள உலகின் அதிவேக மனிதன் என அழைக்கப்படுபவர் உசைன் போல்ட் ஆவார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த வரான இவர் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே போல உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 11 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், 100 மீ,  200 மீ, 4x400 மீ ஓட்டப்பந்தயங்களில் சிறுத்தை பாய்ச்சல் வேகத்தில் ஓடக் கூடிய உசைன் போல்ட்  தற்போது சாதாரணமாக நடக்கக் கூட முடி யாமல் கூட அவதிப்படுகிறார். இதனை அவரே ஒரு பேட்டியில்,”என்னால் இப்பொழுது படிக்கட்டுகளில் கூட ஏற முடியவில்லை” என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உசைன் போல்டின் இந்த நிலைமைக்கு அதிகமான உடற்பயிற்சியா? அல்லது பழைய காயங்களின் பக்க விளைவா? என்ற கேள்விகளுடன் ஆதார மற்ற பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சத்தீஸ்கரில் சோகம் கபடி மைதானத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை அன்று இரவு உள்ளூர் அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிக்காக அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்ட கூடாரம் மீது உயர் அழுத்த மின் கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சதீஷ் நேதாம், ஷியாம்லால் நேதாம் மற்றும் சுனில் ஷோரி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் தொடர் சிகிச்சையில் இருந்தாலும் அவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் ஞாயிறன்று தெரிவித் தனர்.

இன்று விடுமுறை

17ஆவது சீசன் ஆசியக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது “சூப்பர் 4” சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், திங்கள்கிழமை அன்று ஆசியக் கோப்பை தொடருக்கு ஓய்வு நாளாகும். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் “சூப்பர் 4” சுற்றின் 3ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை  அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது.

புரோ கபடி 2025 : இன்றைய ஆட்டங்கள்

குஜராத் - பெங்களூரு
நேரம் : இரவு 8 மணி

தமிழ் தலைவாஸ் - உ.பி., யோதாஸ்
நேரம் : இரவு 9 மணி

இடம் : எஸ்எம்எஸ் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஒடிடி)