facebook-round

img

இந்தியாவின் மாபெரும் செயல்படும் சுமை மோடிதான்! - கே.கனகராஜ்

இந்தியாவின் மாபெரும் செயல்படும் சுமை (Biggest ill-performing liability of india) மோடிதான்!

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் செயல்படா சொத்து(NPA) அதாவது பெருமுதலாளிகள் வாங்கி உரியகாலத்தில் செலுத்தாத கடன் பாதியாக குறைந்துவிட்டதாம்.
எவ்வளவு -எவ்வளவாகக்- குறைந்தது?
20 லட்சம் கோடி 10 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது!
மோடி எவ்வளவு திறமைசாலி! அவ்வளவு வராக்கடனை எளிதாக வசூலித்திருக்கிறாரே!
கிழிஞ்சது. அதை வசூலிக்கவில்லை. தள்ளுபடி செய்துவிட்டார்.
அப்போ அந்தப் பணம் வங்கிக்கு நட்டம். அப்படித்தானே!
அதேதான்! வங்கிகளின் லாபத்தில் வராக்கடனுக்கு என்று ஆண்டுதோறும் பெரும்பகுதியை ஒதுக்கி வைக்கிறார்கள். அந்தப்பணம்தான் பெருமுதலாளிகள் கட்டாமல் ஏமாற்றிய பணத்திற்குப் பதிலாக வரவு வைக்கப்படுகிறது.
அப்போ வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்படுமே!
ஆமா! ஆமா!! பொதுத்துறை வங்கிகள் திறமையற்றவை, நட்டத்தில் இயங்குகின்றன என தம்பட்டமடித்து 'கருணை' காட்டி ஒன்றிய அரசாங்கம் பட்ஜெட்டில் பணம் கொடுக்கும்.
பட்ஜெட்டுக்கு பணம் எங்கிருந்து வரும்?
நம்ம கொடுக்கிற வரிப்பணம்தான்!
அதாவது அரசிக்கு வரிபோட்டு பணம்திரட்டி அதை அதானி வாங்கின கடனுக்கு கொடுப்பது.
அயோக்கியத் தனமால்ல இருக்கு?
ஆமா! அதனாலதான் சொல்றேன் வராக் கடன்களை செயல்படா சொத்துன்னு சொல்றதைவிட  இந்தியாவைப் பொறுத்த மட்டில் மோடிதான் விரைந்து செயல்படும் பெருஞ்சுமை.

- கே.கனகராஜ்

;