facebook-round

img

'காலி' கூட்டமொன்று 'காளி காளி' எனக் கூவிக்கொண்டே கடந்து போகிறது

கிழவிகளின்

சுருக்குப்பைகள் 'காலி'

இல்லத்தரசிகளின்

கடுகு டப்பா 'காலி'

ஊதியம் பெறுவோரின்

பாக்கெட்டுகள் 'காலி'

இளைஞர்களின்

வேலைகள் 'காலி'

மொத்தத்தையும் 'காலி'

செய்து விட்ட 'காலி'

கூட்டமொன்று

'காளி காளி' எனக்

கூவிக்கொண்டே

கடந்து போகிறது....

ஆர். பத்ரி

;