1)இந்தியாவில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4123.
2)பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 1484.
3) இதில் கடந்த பத்து ஆண்டுகளில் வேறு கட்சிகளில் இருந்து பாஜக விலைக்கு வாங்கியவர்களுடைய எண்ணிக்கை 444 .
4)காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டும் அவர்கள் விலைக்கு வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் 226.
5) காங்கிரஸ் கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 676.
6)பாஜக வாங்கிய 444 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 226 பேர் காங்கிரஸிலிருந்து வாங்கப்பட்டவர்கள்.
7)மோடி எருமையை பறிச்சுப்பாங்க தாலிய அறுத்துருவாங்க சொத்த புடிங்கிப்பாங்க பணத்தை எடுத்துப்பாங்க தங்கத்தை எடுத்துப்பாங்க வெள்ளியை எடுத்துப்பாங்க என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு கட்சி அந்த கட்சியின் கொள்கைகளை சொல்லி வாங்கி வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்வது திருட்டு இல்லையா?
இது ஒரு வழிப்பறியை விட மோசம் இல்லையா?
9) இந்த 444 எம்எல்ஏக்கள வாங்கினதனால சில மாநிலத்தில அரசாங்கங்களையும் இவங்க மொத்தமா வாங்கி இருக்காங்க.
10) இது ஒரு பொழப்பு இத வச்சுக்கிட்டு என்னை யாரும் குறை சொல்ல முடியுமா? உங்க எருமை மாட்டைத் திருடிருவாங்கன்னு அவர் பேசிட்டு இருக்காரு.
எருமை மாட்டைப் பறிக்கிறது இருக்கட்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையே திருடுகிற ஆசாமிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
-க.கனகராஜ்
சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்