facebook-round

img

சதீஷ் ஆச்சார்யாவின் இரு கார்ட்டூங்களை நீக்க மோடி அரசு முயற்சி!

பிரதமர் மோடியை விமர்சிக்கும், தனது இரண்டு கார்ட்டூன்களை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:
"எனது இரண்டு கார்ட்டூன்களை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.
எனது 15 ஆண்டு கால சமூக ஊடக அனுபவத்தில், எப்போதெல்லாம் ஒரு அரசாங்கமோ அல்லது அரசியல்வாதியோ ஒரு கார்ட்டூனை வலுக்கட்டாயமாக தடுக்க முயற்சிக்கும்போதெல்லாம், அந்த கார்ட்டூன் பொதுவாக பத்து மடங்கு அதிகமான வாசகர்களைச் சென்றடைகிறது என்பதை அறிந்திருக்கிறேன்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.