என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியால் மக்கள் துயரம் கட்சி தாவும் வேட்பாளர்களைப் புறக்கணிப்பீர்
புதுச்சேரியில் ஜி. ராமகிருஷ்ணன் முழக்கம்! புதுச்சேரி, ஏப். 3 - “தேர்தலுக்குத் தேர்தல் சுய நலத்திற்காகக் கட்சி மாறும் வேட் பாளர்களைப் புதுச்சேரி மக்கள் இந்தத் தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில், திருபுவனை (தனி) தொகுதி யில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தட்சிணாமூர்த்தியை ஆதரித்து, வெள்ளியன்று திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். மக்களுக்காக வீதியில் நின்ற வேட்பாளர் மண்ணாடிப்பட்டு கமிட்டி செய லாளர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக மாண வர் மற்றும் வாலிபர் சங்கங்களில் தடம் பதித்து, சாதாரண எளிய மக்க ளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடியவர் தோழர் தட்சிணா மூர்த்தி. குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்வ தில் முன்னணியில் நின்று களம் கண்டவர். இத்தகைய மக்கள் சேவகரைத் திருபுவனை தொகுதி மக்கள் ‘அரிவாள் சுத்தியல் நட்சத்தி ரம்’ சின்னத்தில் வாக்களித்து பெரு வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். ஊழல் கூட்டணியும் கொள்கையற்ற வேட்பாளர்களும் எதிர்த்தரப்பினரைச் சாடிய அவர், “ஒருபுறம் புதுச்சேரி காமா ட்சி அம்மன் கோவில் சொத்துக் களைக் கொள்ளையடித்த பாஜக வேட்பாளர்கள், மறுபுறம் கொள் கையே இல்லாமல் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருக்கும் வேட்பாளர் கள் என இவர்கள் இருவருக்கும் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தட்சிணாமூர்த்தி தனித்துவமாகத் திகழ்கிறார். என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் போலி மருந்து ஊழலால் புதுச்சேரி மக் கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய மக்கள் விரோதக் கூட்டணியைத் தூக்கியெறிய வேண்டிய நேரம் இது” என்றார். எழுச்சிமிக்கப் பிரச்சாரம் மதகடிப்பட்டில் தொடங்கிய இந்தப் பிரச்சாரப் பயணம் திருபுவனை மற்றும் திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் பொது மக்களின் உற்சாக வரவேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிபி எம் மாநிலச் செயலாளர் ராமச்சந்தி ரன், மாநிலச் செயற்குழு உறுப் பினர்கள் தமிழ்ச்செல்வன், சீனு வாசன், மாநிலக் குழு உறுப்பினர் கள் சங்கர், இளவரசி, ராமமூர்த்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ரகு நாத், நாகராஜ், முத்து, சங்கரி உள்ளி ட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். லாசுப்பேட்டை சிபிஎம் வேட்பா ளர் ஆர்.ராஜாங்கத்தை ஆதரித்தும் பல்வேறு மையங்களில் ஜி.ராம கிருஷ்ணன் பிரச்சாரம் மேற் கொண்டார்.
