tamilnadu

img

சிபிஎம் பழனி தொகுதி வேட்பாளர் என். பாண்டிக்கு வைப்புத் தொகை அளித்த தியாகி இடுவாய் இரத்தினசாமி குடும்பத்தார்!

சிபிஎம் பழனி தொகுதி வேட்பாளர்  என். பாண்டிக்கு வைப்புத் தொகை அளித்த தியாகி இடுவாய் இரத்தினசாமி குடும்பத்தார்!

பழனி, ஏப். 3 - பழனி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டிக்கு, தியாகி இடு வாய் ரத்தினசாமி மற்றும் போராளி அ.பழ னிச்சாமி குடும்பத்தார், வேட்புமனுவுக்கான வைப்புத் தொகை ரூ. 10 ஆயிரத்தை வழங்கி னர். பழனி நகரில் நடைபெற்ற பேரவை கூட்டத்தின் போது, கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே. கணேசன், தோழர் அ. பழனிச்சாமியின் மூத்த மகன் அ.ப. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து வேட்பாளர் என். பாண்டியிடம் வைப்புத்தொகையை வழங்கினர்.  பழனி சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், செ. முத்து கண்ணன், ஆர். சச்சி தானந்தம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.