tamilnadu

img

தமிழை வஞ்சிப்பதும் - தமிழர்களை அவமதிப்பதுமே பாஜக குணம்

தமிழை வஞ்சிப்பதும் - தமிழர்களை அவமதிப்பதுமே பாஜக குணம்

கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் சாடல் கோயம்புத்தூர், ஏப். 3 - தமிழகத்தை வஞ்சிப்பதும், தமிழர்களைத் திட்டமிட்டு அவமானப் படுத்துவதுமே பா.ஜ.க.வின் உண்மை யான குணம் என்று தமிழக முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமை யாகச் சாடினார். கோவை கொடிசி யாவில் வியாழன் இரவு நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்துப் பேசிய அவர்,  பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய  இரு கட்சிகளின் மக்கள் விரோதப் போக்குகளையும் அம்பலப்படுத்தி னார். 2021-இல் ஆட்சிப் பொறுப் பேற்றது முதல் கோவை மாவட்டத் திற்குத் தான் வழங்கிய முக்கியத்து வத்தையும், நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற வளர்ச்சித் திட்டங் களையும் பட்டியலிட்ட முதலமைச்சர், கோவை தனது சொந்த ஊர் என்று சொல்லத்தக்க அளவிற்குத் தம்மோடு ஒன்றிப் போயிருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் ‘தமிழ் வேஷம்’ கலைந்தது பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டிய முத லமைச்சர், தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழுக்கும் தமிழருக்கும் பாசக்காரர் கள் போல பா.ஜ.க.வினர் நடிப்ப தாகக் குற்றம் சாட்டினார். பிற  மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது தமிழர்களை வன்முறையாளர் களாகவும், திருடர்களாகவும் பிரத மர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலை வர்கள் சித்தரிப்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் அவர் விளக்கி னார். ஒடிசாவில் தமிழர்களை இழிவு படுத்தும் விளம்பரங்கள் வெளி யானது, பூரி ஜெகந்நாதர் கோவில் கரு வூலச் சாவி தொடர்பாகத் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி  மற்றும் கர்நாடக அமைச்சர் ஷோபா  தமிழர்கள் குறித்துப் பேசிய சர்ச்சைக் குரிய கருத்துகள் என அனைத்தை யும் பட்டியலிட்டு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பா.ஜ.க. வின் குணத்தை அம்பலப்படுத்தினார். தமிழகத்தை இவ்வளவு இழிவுப் படுத்தும் பா.ஜ.க.விற்கு தமிழக மக்கள் நிச்சயம் இடம் தரமாட்டார்கள் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மெட்ரோ ரயில் புறக்கணிப்பும் வஞ்சக அரசியலும் கோவை மற்றும் மதுரை போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கி வைத்திருப்பது தமிழ கத்தின் மீதான வஞ்சனையே என்று  அவர் சாடினார். மக்கள் தொகையைக்காரணம் காட்டி தமிழக நகரங்களைப் புறக் கணிக்கும் பா.ஜ.க., வட மாநிலங்களில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்க ளுக்கு மட்டும் மெட்ரோ வசதிகளை வாரி  வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல ஆக்ராவில் மெட்ரோ விடு வதாக எள்ளி நகையாடினார். இது போன்ற மாற்றாந்தாய் மனப்பான்மையால்தான் தமிழக மக்கள் பா.ஜ.க.வை அடியோடு வெறுக்கிறார்கள் என்று அவர் விளக்கினார். திமுக அரசின் சாதனைகளும்  அதிமுகவின் நகலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த முதலமைச்சர், தி.மு.க.வின் திட்டங்களையே அவர்கள் காப்பி அடித்து வெளியிட்டிருப்பதாகக் கூறினார். முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு எந்த உருப்படியான திட்டமும் செய்யப்படவில்லை என்றும், ஆனால் திமுக ஆட்சியில் ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, பில்லூர் குடிநீர் திட்டம் எனப் பல மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, 300 கோடி ரூபாயில் கட்டப் பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் முதலமைச்ச ராகப் பதவியேற்றவுடன் திறக்கப்படும் முதல் திட்டமாக இருக்கும் என்று அவர் பெருமிதத்துடன் அறிவித்தார். வாழ்வாதார முன்னேற்றத்திற்கான வாக்குறுதிகள் தொடர்ந்து ‘திராவிட மாடல் 2.0’ திட் டத்தின் கீழ் வரவிருக்கும் வாக்குறுதிகளை அவர் விவரித்தார். மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு கூடியிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், குடும்பத் தலைவிகள் தங்களுக்குப் பிடித்த வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை மற்றும் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங் கும் திட்டங்கள் தமிழகத்தின் தலையெ ழுத்தையே மாற்றியமைக்கும் என அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு நவீன பம்பு செட்டுகளை இலவசமாக வழங்கும் திட்டம் மூலம் கோவையின் மோட்டார் பம்ப் தொழில்துறை பெரும் புத்துயிர் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கோவை மண்டல வெற்றி வேட்பாளர்கள் அறிமுகம் இறுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கோவை தெற்கில் போட்டியிடும் வி. செந்தில்பாலாஜி, கோவை வடக்கில் துரை செந்தமிழ்ச்செல்வன், சூலூரில் தளபதி முருகேசன், கிணத்துக்கடவில் சபரி கார்த்தி கேயன், பொள்ளாச்சியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நித்தியா னந்தம், வால்பாறையில் சுதாகர், தொண்டா முத்தூரில் என்.ஆர். கார்த்திகேயன் மற்றும் மேட்டுப்பாளையத்தில் கவிதா கல்யாண சுந்தரம் ஆகியோரை அறிமுகம் செய்த  அவர், சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம் பாளையத்தில் காங்கிரஸ் சார்பில் அறி விக்கப்படும் வேட்பாளர்களுக்கும் மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். 2024-இல் 40-க்கு 40 என்ற வரலாற்று வெற்றியைத் தந்தது போல, இம்முறையும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மக்கள் திமுக கூட்டணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.