கார்ப்பரேட்டுகள்,
நிலத்தை பிடுங்கும் போது..
துயில் கொண்டிருந்தது
உங்கள் இறையாண்மை !
உழவர் தூக்கில்
தொங்கும் போது..
ஃபோட்டோ ஷூட்டில் இருந்தது
உங்கள் இறையாண்மை !
பசியோடு, ஆயிரம் கிலோமீட்டர்
தொழிலாளர்கள் நடந்த போது..
விளக்கேற்றி விளையாடிக் கொண்டிருந்தது
உங்கள் இறையாண்மை !
குடிநீர் தனியாருக்கு
விற்கப்படுகிறது..
ஒப்பந்த கொண்டாட்டங்களில்..
மது கோப்பைக்கு பின்னே
ஒளிந்துக் கொள்கிறது
உங்கள் இறையாண்மை !
மசூதிகள் இடிக்கப்படும் பொழுதோ..
மாட்டு மூத்திரம் தேசிய பானமாக்கப்படும் பொழுதோ..
இறந்த பசுமாட்டிற்காக
தலித்துகள் சித்ரவதை செய்யப்பட்ட
பொழுதோ...
ஆழ்நிலை தியானத்தில் இருந்தது
உங்கள் இறையாண்மை !
திருட்டுச் சாமியார்கள்
தனி நாடு வாங்கும் போதோ ,
காடுகளை வசப்படுத்தும் போதோ
பஜனை பாடிக் கொண்டிருந்தது
உங்கள் இறையாண்மை !
நாட்டுக்கு சோறு போட்டவன்
தன் உரிமைக்கு
போராடும் போது மட்டும்..
மதுக்கோப்பைக்கு பின்னிருந்து
பஜனையை முடித்துக் கொன்டு
சோம்பல் முறித்துக் கொண்டு
வேகமாய் ஓடி வந்து
தேசம் தேசமென அலறுகிறது
உங்கள் இறையாண்மை !!!
பதிவில்.