election2021

img

இப்போதே 26 தொகுதிகளில் வெற்றியா? அமித்ஷா இவிஎம் இயந்திரத்தை எப்போது திறந்து பார்த்தார்? மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர் தல் நடைபெற்று வருகிறது. இதில்,30 தொகுதிகளுக்கான முதற்கட்டவாக்குப்பதிவு சனிக்கிழமையன்று நடைபெற்றது. 84.63 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மேற்கு வங்க முதற்கட்டத் தேர்தல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் நடந்த முதற்கட்ட தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்த 30 தொகுதிகளில் 26-லும், அசாமில் தேர்தல் நடந்த47 தொகுதிகளில் 37-லும் பாஜகவெற்றி பெறும் என்று கூறினார்.இது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமானமம்தா பானர்ஜியை ஆவேசமடையச் செய்துள்ளது. “வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட பிறகுதான் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியவரும். ஒரே ஒரு கட்டத் தேர்தல்முடிந்த பிறகு எப்படி இந்தளவிற்கு உங்களால் உறுதியாக சொல்ல முடிகிறது? நீங்கள்(அமித் ஷா) என்ன வாக்குப் பதிவு இயந்திரத்தை திறந்து பார்த்து விட்டீர்களா? அப்படியெனில் பாஜக 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏன் கூறவில்லை? எனவே அவசரப்படாதீர்கள். மே 2-ஆம் தேதி வரை காத்திருங்கள். வங்கத்தை வெளிமாநிலத்தவர்கள் யாரும் ஆள முடியாது” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.