கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்றுகுறிப்பிட்டு, சமூகவலை தளங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மோசடிப் பிரச்சாரத் தில் இறங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திற்கான முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27 அன்று நடைபெற்றது. இதில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், முதற்கட்ட தேர்தல் நிறைவுற்றதை தொடர்ந்து தனியார் செய்திநிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என கூறி,ஸ்கிரீன் ஷாட் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகின.இந்த கருத்துக் கணிப்பின்படி 30 தொகுதிகளுக் கான தேர்தலில் திரிணாமுல்காங்கிரஸ் 23 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும், பாஜக1 முதல் 3 தொகுதிகளையும், இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது. இது மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், சமூக வலைதளங்களில் வலம் வந்த ஸ்கிரீன்ஷாட்கள், தோல்வி பயத்தில் இருக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த விஷமிகளால் உருவாக்கப்பட்டவை என்பதும், அதில் உண்மையில்லைஎன்பதும் பின்னர் தெரியவந்தது. கருத்துக் கணிப்பை மேற்கொண்டதாக கூறப் பட்ட தனியார் செய்தி நிறுவனமும் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் ‘எடிட்’ செய்யப்பட் டது என தெரிவித்து உள்ளது.