election2021

img

பாஜக  தலைவர்  பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிப்பு....

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட வாக்குப்பதிவுகள்முடிந்துள்ளன. இதில் ஏப்ரல் 10 அன்று நடந்த 4 ஆவது கட்ட தேர்தலில் கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் வாக்குச் சாவடி ஒன்றில் மத்தியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில், சிட்டால்குச்சியில் குறைந்தது 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி 12 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.