மதவாதிகளிடமே அடைக்கலம்
சிறந்த மருத்துவர், சமூக சேவகர் எனப் பெயரெடுத்துள்ள திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் ஆறு வருடங்களுக்கு முன் பாஜக-விலிருந்து விலகி மதிமுக-வில் ஐக்கியமானார். பின்னர் திமுக-வில் ஐக்கியமானார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு தலைமை வாய்ப்பு வழங்காததால் மீண்டும் பாஜக-வில் ஞாயிறன்று அடைக்கலமானார். தமக்குப் பிடித்தமான கட்சிக்கு ஒருவர் செல்வதற்கு உரிமை உண்டு. அதை யாரும் கேள்வியெழுப்ப முடியாது. ஆனால், மருத்துவர் சரவணன் கூறியுள்ள செய்திதான் ஆபத்தானது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட, ‘‘திமுக-வில் தற்போது போட்டியிட வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் பாஜக-வில் இணைந்திருப்பேன். (தினமலர், நெல்லை பதிப்பு இணையதள தகவல்)’’ எனக் கூறியுள்ளார். மதவாத சக்திகளிடமிருந்து புறப்பட்ட அவர் மீண்டும் மதவாதிகளிடமே அடைக்கலம் புகுந்துவிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிவிட்டது போலும்.
கொள்கை பெரிதல்ல... சீட் தான் முக்கியம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன் ஞாயிற்றுக்கிழமை பாஜக-வில் சேர்ந்தார். மதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் சேர்ந்த அவர் சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் கமலாலயத்தில் குடிபுகுந்தார். குடிபுகுந்த சில மணி நேரத்தில் பாஜக தலைமை அவருக்கு மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் சீட் வழங்கியுள்ளது. கொள்கையாவது... புடலங்காயாவது...