tamilnadu

img

திருநெல்வேலி : ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்

நெல்லை மாநகர காவல்துறையில் திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லையில் சமூக சேவை சங்கம் மற்றும் பேஸ் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில் திருநங்கைகளின் வாழ்வும், வளர்ச்சியும் என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை காவல் துறையின் துணை ஆணையர் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளரை சந்தித்த காவல் துணை ஆணையர், முதல் முறையாக ஊர்க்காவல் படையில் திருநங்கைகள் பணியமர்த்தப்பட உள்ளதாக கூறினார். மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்றும் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்