election2021

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி பேசினால் தகாத வார்த்தையால் திட்டுவேன்... பொள்ளாச்சி ஜெயராமன் எரிச்சல்....

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்களை தகாத வார்த்தையால் திட்டுவேன் என்று அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எரிச்சலுடன் கூறியுள்ளார். பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புதனன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சமூகவலைத்தளத்தில் எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். எனது குடும்பத்தினரை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேசினால் தாமும் தகாத வார்த்தையால் பேசுவேன் என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையில்  பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் மற்றும் அதிமுக பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆரம்பகாலத்தில் இதனை முழுமையாக மறுத்த பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டிபவர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.