கரூர்:
நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிதேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றசட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 72.78 சதவீதவாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும்மையங்களில் கண்காணிப்பை பலப்படுத்தக்கோரி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.