தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது.இதில் 234 தொகுதிகளுக் கான முன்னிலை நிலவரங் கள் வெளிவந்தன. மாலை 6 மணி நிலவரப்படி திமுக கூட்டணிக்கட்சிகளின் வேட் பாளர்களின் முன்னிலை நிலவரம் வருமாறு:
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வெற்றி!
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 51 ஆயிரத்து 174 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றி.அமைச்சர் கே.சி.வீரமணியை தோற்கடித்தார்.
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
கீழ்ப்பெண்ணாத்தூர் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி 26,800 வாக்குகள் வித்தியாசத்திலும் பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் அப்துல் வகாப் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் பரமக்குடி திமுகவேட்பாளர் செ.முருகேசன் 12,528 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.
திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 60849 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் 12,830 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மதுரை மத்திய தொகுதி திமுகவேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 35,000 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி.
திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் 17335வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி 29687 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 80161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி 18வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 81625வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
வந்தவாசி தொகுதியில் திமுகவேட்பாளர் எஸ்.அம்பேத் குமார் வெற்றி.
குன்னூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி.
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் முத்துராஜா 1223 வாக்குகள் முன்னிலை.
திருமயம் திமுக வேட்பாளர் ரகுபதி 1121 வாக்குகள் பெற்று முன் னிலை.
ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் 14988 அதிகம் பெற்று முன்னிலை.
அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் 8700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.
பெரியகுளம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் 10,092 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 19322 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா 7578 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
திருச்சி மாவட்டத்தில் 8 சட்டமன்றதொகுதிகளில் திமுக முன்னிலை.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் 2155 வாக்குவித்தியாசத்தில் முன்னிலை.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் 15279 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு 6,153 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.
காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 11,428 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
இராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி.