election2021

img

சிபிஎம் வேட்பாளர்களின் நிறைவு பிரச்சார எழுச்சிக் காட்சிகள்....

1. அரூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குமார் நிறைவு பிரச்சாரப் பேரணியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை கையிலேந்தி அணிவகுத்த பெண்கள்.

                                    ********

2.கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் நிறைவுப் பிரச்சாரப் பேரணியில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

                                    ********

3.கீழ்வேளூர் சிபிஎம் வேட்பாளர் நாகைமாலி நிறைவுப் பிரச்சாரப் பேரணியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

                                    ********

4.திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி நிறைவு பிரச்சாரத்தில் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்த கூட்டணிக் கட்சியினர்.

                                    ********

5.திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய் பிரச்சார நிறைவையொட்டி தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் ஊர்வலங்கள் நடந்தன. வில்லாபுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.

                                    ********

6.கந்தர்வகோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரை பிரச்சார நிறைவையொட்டி மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக நிறைவுப் பிரச்சாரத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.