election2021

img

தீ வைத்து எரிக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை....

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநில மஞ்சள் விவசாயிகள், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தீயிட்டுக் கொளுத்திப் போராட்டம் நடத்தியுள்ளனர்.தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள ஆர்மூர் என்ற இடத்தில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது.மஞ்சள் விவசாயிகள் நலனுக்காக மஞ்சள்வாரியம் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டிற்கான தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோதும் இதேபோல மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று அந்த மாநிலத்தில் பாஜக வாக்குறுதி கொடுத்ததாகவும், ஆனால், அந்த வாக்குறுதியை இன்றுவரை அக்கட்சி நிறைவேற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், அதே வாக்குறுதியை தமிழ்நாட்டு விவசாயிகளிடமும் பாஜக தற்போது கூறிள்ளது. இதையடுத்தே, எங்களை ஏமாற்றியது போதாது என்று, தற்போது தமிழ்நாட்டு விவசாயிகளையும் ஏமாற்றப் பார்க்கிறீர்களா? என்று கொதித்தெழுந்த தெலுங்கானா மாநில மஞ்சள் விவசாயிகள், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.