world

img

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

காசா,ஏப்.17- காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 19 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஏப்.16) காலை முதல் கிழக்கு காசாவின் பெயிட் ஹனோன் மற்றும் வடக்கு காசாவின் பெயிட் லஹியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவின் பல்வேறு இடங்களில் குறிப்பாக மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.