election2021

img

இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு.... மக்கள் தலைவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் போட்டி...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஊழல் இல்லாதஅரசாக தொடர, அதிகாரத்தைக்கைப்பற்ற வலுவான வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கியுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சியை, மக்கள் நலனை உறுதி செய்யும்  மதச்சார்பற்ற அரசுஅமைய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஏராளமான கட்சித் தலைவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள்மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநிலப் பொறுப்பு செயலாளர்  ஏ.விஜயராகவன் புதனன்று (மார்ச் 10) அறிவித்தார்.

15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு முதல்வரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் உட்பட 83 வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  மொத்தமுள்ள 140 இடங்களில், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமைவகிக்கும் சிபிஎம் 85 தொகுதிகளில்போட்டியிடுகிறது. மஞ்ஞேஸ்வரம், தேவிகுளம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். பட்டியலில் 12 பெண்கள், 9 சுயேட்சைகள் உள்ளனர். கட்சி சார்பில் போட்டியிடும் 74 வேட்பாளர்களும் ஒன்பது சிபிஎம்ஆதரவு சுயேட்சைகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தர்மடம் தொகுதியில்  பினராயி விஜயன் போட்டியிடுவார். மத்தியக் குழு உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான கே.கே.ஷைலாஜா (மட்டன்னூர்), மத்தியக் குழு உறுப்பினர்கள் எம்.வி.கோவிந்தன் (தளிப்பரம்பு), கே.ராதாகிருஷ்ணன் (சேலக்கரா), மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எம்.எம்.மணி (உடும்பன்சோலை), டி.பி.ராமகிருஷ்ணன் (பேராம்பிறா), செயற்குழு உறுப்பினர் கே.என்.பாலகோபால் (கொட்டாரக்கரா) ஆகியோரும் களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர, அமைச்சர்கள் ஜே.மெர்சிகுட்டியம்மா, கடகம்பள்ளி சுரேந்திரன், ஏ.சி.மொய்தீன், கே.டி.ஜலீல் ஆகியோரும் மக்கள் தீர்ப்பை நாடுகின்றனர். கலைஞர்கள் முகேஷ் (கொல்லம்), தலிமா (அரூர்),எலும்பியல் நிபுணர் டாக்டர் ஜே.ஜேக்கப் (த்ரிக்காக்கரா) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மாணவர்- வாலிபர் அமைப்புகளில் செயல்படும் 13 பேர் வேட்பாளர்களாக  உள்ளனர். இவர்களில் 4 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். ஜேக்சி.தாமஸ் (புதுப்பள்ளி), சச்சின் தேவ் (பாலுசேரி), லிண்டோ ஜோஸ் (திருவம்பாடி), பி மிதுனா (வண்டூர்) ஆகியோராவர். 31 முதல் 41 வயது வரை 8 வேட்பாளர்களும் 41 முதல் 51 வரையிலும் 13 பேரும், 51 முதல் 61 வரையிலும்  33 பேரும், 60 வயதுக்குமேற்பட்ட 24 பேரும் போட்டியிடுகிறார்கள். இதில் 42 பேர் பட்டதாரிகள், 28 வழக்கறிஞர்கள், 14 முதுநிலைபட்டதாரிகள், பிஎச்டி பெற்றவர்கள் இருவர், எம்பிபிஎஸ் பட்டதாரிகள் இருவர் உள்ளனர்.

முழுமையான பட்டியல் :

காசர்கோடு மாவட்டம்: உடுமா -சி.எச் குஞ்ஞம்பு, த்ரிக்கரிப்பூர் -எம்.வி.ராஜகோபாலன். கண்ணூர் மாவட்டம்: பையன்னூர் - டி.ஐ.மதுசூதனன்,  கல்யாசேரி - எம் விஜின், தளிப்பரம்பு - எம்.வி.கோவிந்தன், அழிக்கோடு - கே.வி.சுமேஷ்,  தர்மடம் - பினராயி விஜயன், தலசேரிஸ்- ஏ.என்.சம்சீர்,  மட்டன்னூர் - கே.கே.சைலஜா, பேராவூர் - ஜாகிர் உசேன்.

                                ********

வயநாடு மாவட்டம்:  மானந்தவாடி - ஓ.ஆர்.கேளூர், சுல்தான்பத்தேரி - எம்.எஸ்.விஸ்வநாதன்.

                                ********

கோழிக்கோடு மாவட்டம்: கொய்லாண்டி - கனத்தில் ஜமீலா,பேராம்ப்றா -டி.பி.ராமகிருஷ்ணன், பாலுசேரி- சச்சின் தேவ், கோழிக்கோடு வடக்கு -  தோட்டத்தில் ரவீந்திரன், பேப்பூர் - பி.ஏ.முஹம்மது ரியாஸ், குண்டமங்கலம் - பி.டி.ஏ ரஹீம், கொடுவள்ளி - காராட்டு ரசாக், திருவம்பாடி - லிண்டோ ஜோசப்.

                                ********

மலப்புரம் மாவட்டம்: கொண்டோட்டி - சுலைமான் ஹாஜி, நிலம்பூர் - பி.வி.அன்வர், வண்டூர் - பி.மிதுனா, பெரிந்தல்மன்னா - கே.பி.முஹம்மதுமுஸ்தபா, மங்கடா - டி.கே.ரஷிதலி,மலப்புரம் - பாலோலி அப்துர்ரஹ்மான், வெங்ஙரா - பி.ஜிஜி, தானூர் - வி.அப்துர்ரஹ்மான், திரூர் - கபூர் லில்லீஸ், தவனூர்- கே.டி.ஜலீல், பொன்னானி -பி.நந்தகுமார்.

                                ********

பாலக்காடு மாவட்டம்: திருத்தலா - எம்.பி.ராஜேஷ், ஷோர்னூர்- பி.மம்மிக்குட்டி, ஒற்றப்பாலம் - பிரேம்குமார், கோங்ஙாடு - கேசாந்தகுமாரி, மலம்புழா - எ.பிரபாகரன், பாலக்காடு - சி.பி.பிரமோத் குமார், தரூர் - பி.பி.சுமோத், நெம்மாரா - கே.பாபு, ஆலத்தூர் - கே.டி.பிரசேனன்,

                                ********

திருச்சூர் மாவட்டம்: சேலக்கரா - கே.ராதாகிருஷ்ணன், குன்னம்குளம் - ஏ.சி.மொய்தீன், குருவாயூர் - எம்.கே.அக்பர், மணலூர் - முரளி பெருநெல்லி, வடக்காஞ்சேரி - சேவியர் சிட்டிலப்பள்ளி, இரிஞ்ஞாலக்குடா - ஆர்.பிந்து, புதுக்காடு -கே.கே.ராமச்சந்திரன்.
எர்ணாகுளம் மாவட்டம்:  ஆலுவா - ஷெல்னா நிஷாத், களமாசேரி - பி.ராஜீவ், வைப்பில் - கே.என். உன்னிகிருஷ்ணன், கொச்சி - கே.ஜே.மேக்சி,  திரிப்புனித்துறா - எம்.ஸ்வராஜ், எர்ணாகுளம்- ஷாஜி ஜார்ஜ், த்ரிக்காக்கரா டாக்டர் ஜே.ஜேக்கப், குன்னத்துநாடு- பி.வி.ஸ்ரீனிஜன், கோதமங்கலம் - அந்தோணி ஜான்.

                                ********

இடுக்கி மாவட்டம்: உடும்பஞ்சோலை - எம்.எம்.மணி.

                                ********

கோட்டயம் மாவட்டம்: ஏற்றுமானூர் - வி.என் வாசவன், கோட்டயம் -  கே.அனில்குமார்,  புதுப்பள்ளி - ஜேக் சி.தாமஸ்.

                                ********

ஆலப்புழா மாவட்டம்: அரூர் - தலீமா ஜோஜோ, ஆலப்புழா - பிபி.சித்தரஞ்சன், அம்பலப்புழா - எச்.சலாம், காயம்குளம் - உ. ஜீனியஸ், மாவேலிக்கரா - எம்.எஸ்.அருண்குமார், செங்கன்னூர் - சாஜி செரியன்.

                                ********

பத்தனம்திட்டா மாவட்டம்: ஆரம்முளா - வீணா ஜார்ஜ், கோனி - கே.யூ. ஜனீஷ் குமார்.

                                ********

கொல்லம் மாவட்டம்: சவரா- டாக்டர் சுஜித் விஜயன், கொட்டாரக்கரா - கே.என்.பாலகோபால், குந்டறா -ஜே.மெர்சிகுட்டியம்மா, கொல்லம்-எம். முகேஷ், எரவிபுரம் -எம். நவுசாத்.

                                ********

திருவனந்தபுரம் மாவட்டம்: வர்க்கலா -வி.ஜோய், ஆற்றிங்ஙல் – ஓ.எஸ்.அம்பிகா, வாமனபுரம் - டி.கே.முரளி, கழக்கூட்டம் - கடகம்பள்ளி சுரேந்திரன், வட்டியூர்காவு - வி.கே.பிரசாந்த், நேமம் -வி.சிவன்குட்டி, அருவிக்கரா - ஜி.ஸ்டீபன், பாறசாலா - சி.கே.ஹரிந்திரன், காட்டாக்கடா - ஐ.பி.சதீஷ், நெய்யாற்றிங்கரா - கே.அன்சலன்.