திருவனந்தபுரம்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைஆட்சிமாற்றம் என்பது, கேரளத்தில்கடந்த 40 ஆண்டு காலமாக இருந்துவரும் நடைமுறை ஆகும். அதனை2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் உடைத்தெறிவார்; தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சியில் அமர்வார் என்று அனைத்து கருத்துக் கணிப்புக்களும் கூறி வருகின்றன.
ஹிந்தி செய்திச் சேனலான ஏபிபி (ABP) நிறுவனம், தனது கருத்துக்கணிப்பில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) 83 முதல் 91 இடங்களை வென்று மீண்டும் ஆட்சிக்கு வரும்என்று தெரிவித்திருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎப்) 47 முதல் 55 இடங்கள் கிடைக்கும் என்று கூறியிருந்தது.இதேபோல ஐஏஎன்எஸ் (IANS-CVoter Survey) கருத்துக் கணிப்புஇடது ஜனநாயக முன்னணிக்கு 87 இடங்கள், யுடிஎப் கூட்டணிக்கு 51 இடங்கள் கிடைக்கும் என்றும், சமீபத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்ட கேரளத்தைச் சேர்ந்த ‘மாத்ரூபூமி’ (Mathrubhumi - CVoter survey) கருத்துக் கணிப்பு எல்டிஎப்கூட்டணி 75 முதல் 83 தொகுதிகளில் வெற்றிபெறும், யுடிஎப் 56 முதல் 64 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன.
இந்நிலையில், ‘டைம்ஸ் நவ் -சி வோட்டர்’ (TimesNow - CVotersurvey) கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதிலும், “கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)கூட்டணி 71 முதல் 83 இடங்களில்வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன் னணி (யுடிஎப்) 56 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது.
“கேரளத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயரை 39.3 சதவிகிதம் பேர் கூறியிருப்பதாகவும், காங்கிரசின் உம்மன் சாண்டி முதல்வர் ஆவதற்கு 26.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ள ‘டைம்ஸ் நவ்’, “மாநில அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது” என்று41.64 சதவிகிதம் கருத்து தெரிவித்துள்ளனர்; 20.82 சதவிகிதம் பேர்மட்டுமே திருப்தி இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளது.