திருவனந்தபுரம்:
கேரள சட்டப் பேரவைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றுஅனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் கூறி வருகின்றன.இந்நிலையில், ‘மாத்ரூபூமி - சி வோட்டர்’ இணைந்துநடத்திய கருத்துக்கணிப்பிலும், இடது ஜனநாயக முன்னணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறியுள்ளது.40 சட்டமன்ற தொகுதிகளில் 18 முதல் 85 வயது வரையிலான 14 ஆயிரத்து 931 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தகருத்துக்கணிப்பின் முடிவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி 75 முதல் 83தொகுதிகளில் வெற்றிபெறும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 முதல் 64 தொகுதிகள் வரை கிடைக் கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகபட்சம் 2 தொகுதிகள் கிடைக்கலாம் அல்லதுஒரு தொகுதியும் கூட கிடைக் காமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இடது ஜனநாயக முன்னணிக்கு 40.9 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 37.9 சதவிகித வாக்குகளும், தேசியஜனநாயக கூட்டணிக்கு 16.6 சதவிகித வாக்குகளும்கிடைக்க வாய்ப்புள்ளதாக
வும் கூறப்பட்டுள்ளது.