கண்ணூர்:
கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)மேலும் அதிக இடங்களுடன்மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஆட்சித் தொடர்ச்சியை உறுதி செய்யும் என்றார்.
கண்ணூரில் வியாழனன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஐந்து ஆண்டு ஆட்சியின்சாதனைகள் எல்டிஎப்பின் மக்கள் ஆதரவை அதிகரித்துள்ளது என்பதையே அனுபவம் காட்டுகிறது. அரசாங்கத்திற்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் எதிரான எதிர்க்கட்சியின் வலுவான பிரச்சாரம் இருந்தபோதிலும், உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் எல்டிஎப்ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. மத்திய புலனாய்வு அமைப்பின் உதவியுடன் அரசாங்கத்தை இருளில் தள்ளுவதே ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎப்)பின் உத்தி. ஆயினும்கூட அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மோசமான தோல்வியை ஏற்க வேண்டியிருந்தது.சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களுடன் மீண்டும் வெற்றி பெறுவோம். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் எல்டிஎப்-க்குகிடைக்கும். முன்னணியில்உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் குறைந்துவிட்டதாக வருத்தம் இல்லை. தொகுதிகள் பகிர்வு பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தது. எல்டிஎப்- இல் உள்ள அனைத்து கட்சிகளும் சமமாக கருதப்படுகின்றன.
கேரளாவில், தேர்தல்காலங்களில் சில உணர்ச்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் நடப்பதுண்டு. எல்டிஎப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இத்தகைய சூழ்நிலைகளை எதி்ர் கெள்ளும்.மீதமுள்ள நான்கு இடங்களுக்கான வேட்பாளர்களை இரண்டு நாட்களுக்குள் சிபிஐ அறிவிக்கும். 39 ஆண்டுகளாக யுடிஎப்பின் பகுதியாக இருந்த கேரளகாங்கிரஸ் (எம்) எல்டிஎப் –க்கு வந்தது பெரிய மாற்றமாகும். யுடிஎப்பும் பாஜகவும் கூட்டணி போல் இணைந்து செயல்படுகின்றன.மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் பாஜகவின் கொள்கையை கேரள காங்கிரஸ்ஆதரிக்கிறது. கேரளாவுக்குவெளியே மத்திய நிறுவனங்களால் இரையாக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் என்பதை அவர்கள் உணரவில்லை. தங்கக் கடத்தல் குறித்து விசாரிப்பதற்குப் பதிலாக மத்திய நிறுவனங்கள் செய்திகளை உருவாக்கும் பணிகளை மட்டுமே செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.