திருவனந்தபுரம்:
கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மூன்று பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகி உள்ளன. வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்திற்காக இவர்களின் மனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ளதலசேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக என். ஹரிதாஸ் களமிறக்கப் பட்டு இருந்தார். ஆனால், ஹரிதாஸின் வேட்பு மனுவில் பாஜக தேசியதலைவரின் கையெழுத்து இல்லை என்பதற்காக அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இதேபோல திருச்சூர் மாவட்டம்குருவாயூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிவேதிதா சுப்பிரமணியம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.வழக்கறிஞரான இவர், தனது வேட்புமனுவில் மாநிலத் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் நிவேதிதாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.மூன்றாவது, இடுக்கி மாவட்டத் தில் அமைந்துள்ள தேவிகுளம் தொகுதியாகும். இங்கு பாஜக கூட் டணி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த ஆர். தனலட்சுமி மனுத்தாக் கல் செய்திருந்தார். ஆனால், இவருடைய வேட்பு மனுவில் பாரம் எண்26 சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் முரண்கள் இருப்பதாகவும் கூறி தேர்தல் அதிகாரி தனலட்சுமியின் வேட்பு மனுவை நிராகரித்தார்.தலசேரி, தேவிகுளத்தில் மாற்றுவேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியான நிலையில், குருவாயூரில் மாற்று வேட்பாளரையே பாஜக நிறுத்தவில்லை. இதனால், தலசேரி,குருவாயூர் மற்றும் தேவிகுளம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியே போட முடியாத நிலைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தள்ளப்பட்டு உள்ளது.
2016 தேர்தலில், பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளில் தலசேரியும் ஒன்றாகும். இங்குபோட்டியிட்ட சஜீவன் 22 ஆயிரத்து125 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி. அப்துல்லா குட்டியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.என். ஷம்சர் 34 ஆயிரத்து 117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது. தேவிகுளத்தில் அதிமுக வேட்பாளர் 11 வாக்குகளைப் பெற்றிருந்தார்.