election

img

உள்ளாட்சி தேர்தல் : மேலும் அவகாசம் வேண்டும்....

புதுதில்லி:
 தமிழ்நாட்டில்  உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரிமாநில தேர்தல் ஆணையம் ,உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவகாசத்தை நீட்டிக்க கோரி புதியஇடைக்கால மனுவை தமிழ்நாடு மாநிலதேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.ஏற்கனவே இரு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது  முறையாக கூடுதல் கால அவகாசம் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத கால
அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்  தமிழக மாநில அரசு தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

 தொடர்புடைய செய்தி... 

 நாளை அரசியல் கட்சிகளுடன்தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 6 ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 6 ஆம் தேதி நண்பகல்12 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.