articles

img

அர்ப்பணிப்புடன் முன்னேறும் இடது ஜனநாயக முன்னணி அரசு - பினராயி விஜயன்

அர்ப்பணிப்புடன் முன்னேறும்  இடது ஜனநாயக முன்னணி அரசு - பினராயி விஜயன்

கேரளாவின் சுடர் இப்போது பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. புதிய கேரளாவின் கனவை நனவாக்க, இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசாங்கம் தனது ஆட்சியைத் தொடர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை அரசாங்கத்தி ற்கு வழங்குவது ஒரு பெரிய பொறுப்பு. அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் சமரசமின்றியும் முன்னேறும்.

உயர் கல்வியில் உலகத்தரம்

கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் உட் கட்டமைப்பு மற்றும் கல்வித் திறனை வழங்குவதன் மூலம் உலகத் தரத்திற்கு உயர்ந்து வருகின்றன. உயர்கல்வித் துறையில் அரசாங்கத்தின் தலையீடு அர்த்தமுள்ள முடிவுகளை எட்ட உதவியுள்ளது. நாக் தரவரிசையில், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் கேரள பல்கலைக்கழகம் ஆகியவை ஏ  பிளஸ் பிளஸ் (A++) பெற்றன, மேலும் கோழிக்கோடு, குசாட் மற்றும் காலடி பல்கலைக்கழகங்கள் ஏ பிளஸ் தரத்தைப் பெற்றன. கேரளாவில் 28 கல்லூரிகள் ஏ இரட்டை பிளஸ் தரத்தையும் 49 கல்லூரிகள் ஏ பிளஸ் தரத்தையும் பெற்றன. 82 கல்லூரிகள் ஏ தரத்தைப் பெற்றுள்ளன. என்ஐஆர்எப் தரவரிசை யில், நாட்டின் முதல் 200 கல்லூரிகளில் 42 கேரளா வைச் சேர்ந்தவை. பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி முடிவுகளை சமூகத் தேவைகளுக்குப் பயன்படுத்த எல்.டி.எப் அரசாங்கம் மொழிபெயர்ப்பு ஆய்வகங்களைத் தொடங்கியது. நவ கேரள போஸ்ட் டாக்டரல் பெல்லோஷிப்கள், கைரளி ஆராய்ச்சி விருதுகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு நன்மை பயக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, உயர் கல்வி ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் கேரளாவை அறிவுப் பொருளாதாரமாக மாற்றும் முயற்சிகளில் உயர் கல்வித் துறையின் வளர்ச்சி மிக முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் பெரும் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. கடந்த ஏழரை ஆண்டுகளில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம், டிஜிட்டல் அறிவியல் பூங்கா, கிராபீன் புதுமை மையம் போன்றவை இந்த அரசாங்கத்தின் கீழ் சாத்திய மாகிவிட்டன. மேம்பட்ட வைராலஜி நிறுவனமும் உருவாகியுள்ளது. சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், ஜீனோம் தரவு மையம், மருத்துவ தொழில்நுட்ப கூட்டமைப்பு போன்றவை உரு வாக்கப்பட்டு வருகின்றன.

பொது சுகாதாரத் துறையில் நவீனம்

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் பொது சுகாதார  அமைப்பு நோயாளிக்கு ஏற்றதாக மாற்றப் பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 674 ஆரம்ப சுகாதார மையங்கள் ஏற்கனவே குடும்ப சுகாதார மையங்க ளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 5,000க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன. மாவட்ட பொது மருத்துவமனைக ளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள் வழங்கப் பட்டுள்ளன, மேலும் அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் கேத் லேப்கள் மற்றும் தீவிர இதய சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தாலுகா மருத்துவமனைகளில் 44 கூடுதல் டயாலி சிஸ் அலகுகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளன. தற்போது, 83 தாலுகா மருத்துவமனை களில் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு சிறப்பு மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவும் தொழிலும்... விவசாயத் துறையும், தொழில்துறையும் மிகப்பெரிய அளவில் செழித்து வளர்ந்துள்ளன. விவசாயத் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்த அரசாங்கத்தின் காலம் இது. 2016 ஆம் ஆண்டில் 2 சதவிகிதமாக இருந்த விவசாய வளர்ச்சி தற்போது 4.64 சத விகிதமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் நெல்  சாகுபடி 1.7 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப் பட்டது, ஆனால் இன்று அது 2.5 லட்சம் ஹெக்டே ராக அதிகரித்துள்ளது. நெல் உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேருக்கு 4.56 டன்னாக அதிகரித்துள்ளது. காய்கறி உற்பத்தி ஏழு லட்சம் மெட்ரிக் டன்னிலி ருந்து 16 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்திகள் மதிப்பு கூட்டலுக்காக பல்வேறு பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு ஆதரவு விலையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாகவும் கேரளம் மாறியுள்ளது. தொழில் துறையில் கேரளம் முன்னெப்போதும் இல்லாத சாதனைகளைப் படைத்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 12 சதவிகிதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி இன்று 17 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டில் 9.8 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 14 சதவிகிதமாக உள்ளது. கேரளாவை தொழில்கள் வராத மாநிலம் என்கிற தவறான பிரச்சாரத்தை இன்று,யாரும் எளிதில் பரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் துறைக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் கேரளா நீண்ட தூரம் முன்னேறி வந்துள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்குவதில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்பது பகல் போல் தெளிவாகத் தெரிந்தாலும், இங்குள்ள எதிர்க்கட்சியில் உள்ள சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  தொடக்க நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) விசயத்திலும் கேரளம் ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. 6,400 தொடக்க நிறுவனங்கள் மூலம் கேரளாவில் 63,000 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. யுடிஎப் ஆட்சிக் காலத்தில், 300 தொடக்க நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. 2016 ஆம் ஆண்டில், தொடக்க முதலீடு ரூ.50 கோடி யாக இருந்தது, ஆனால் இப்போது அது ரூ.6000 கோடியை எட்டியுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திர வியல் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. எனவே, தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறை வளர்ச்சியை நோக்கி நாம் செயல்பட்டு வரு கிறோம். கேரளம், நாட்டின் முதல் பொது நுண்ணறிவு மாநாடு மற்றும் ரோபோட்டிக்ஸ் வட்டமேசை மாநாட்டை நடத்தியது. கொச்சியில் நடந்த உலகளா விய முதலீட்டாளர் சந்திப்பில் ரூ.1.5 லட்சம் கோடி  மதிப்புள்ள முதலீடுகளுக்கு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவை அனைத்தையும் செயல்படுத்த ஒரு விரை வான வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. கேரள தொழில் முனைவோர் ஆண்டு திட்டம் தேசிய அளவில் தொழில்துறையில் சிறந்த நடைமுறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, திட்டத்தின் கீழ் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொ டங்கப்பட்டுள்ளன. ரூ.22,500 கோடிக்கு மேல் முதலீடு களை ஈர்த்துள்ளோம், மேலும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி யுள்ளோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், கேரள ஐடி ஏற்றுமதி ரூ.34,000 கோடியிலிருந்து ரூ.90,000 கோடியாக அதிகரித்துள்ளது. எல்.டி.எப் அரசாங்கம் 2016 இல் ஆட்சிக்கு வந்தபோது, மாநிலத்தின் மூன்று ஐடி பூங்காக்களான டெக்னோபார்க், இன்ஃபோபார்க் மற்றும் சைபர்பார்க்கில் மொத்தம் 676 நிறுவ னங்கள் இருந்தன. 84,720 ஊழியர்களும் இருந்தனர். 2023-24 ஆம் ஆண்டில், மூன்று ஐடி பூங்காக்களி லும் 1153 நிறுவனங்களாக அதிகரித்தன. ஊழியர்க ளின் எண்ணிக்கையும் 1,47,200 ஆக அதிகரித் துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், 477 புதிதாக நிறுவனங்களும் அவற்றில், 62,480 ஊழியர்களும் வந்துள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் அரை லட்சம் பேர் தொழில்நுட்ப பூங்காக்களில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். கே-போன் திட்டத்தின் மூலம், கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் அரசு அலுவலகத்திற் கும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்பட்டு  வருகிறது. அனைத்து நவீன கண்ணோட்டங்களை யும் உள்வாங்கிக் கொண்டு அறிவியல் ரீதியான முன் னேற்றத்தை ஏற்படுத்துவதே இடதுசாரி அரசாங் கத்தின் நோக்கமாகும். இன்று, அதை சிறந்த முறை யில் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிகிறது.

 பொதுத்துறை பாதுகாப்பில் தேசத்தின் வழிகாட்டி

கேரளாவில் தற்போது 131 பொதுத்துறை நிறுவ னங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டு களில் அவற்றின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், 41 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கின, ஆனால் இப்போது அது 53 ஆக அதிக ரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், அவற்றின் செயல் பாட்டு லாபம் ரூ. 584 கோடியாக இருந்தது, ஆனால் இப்போது அது ரூ. 1913 கோடியாக அதிகரித்துள் ளது. இடது ஜனநாயக முன்னணி பொதுத்துறை நிறு வனங்களின் மீது காட்டிய சிறப்பு அக்கறையின் விளைவாகவே இந்த முன்னேற்றம் சாத்தியமானது. புதிய உச்சத்தில் சுற்றுலா கேரளத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத் துறையும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. கேரளாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங் கள் குறிப்பிடுகின்றன. கடந்த ஆண்டு, சுமார் 2.5  கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கேரளாவிற்கு வந்தனர். சுமார் 7.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கேரளாவிற்கு வருகை தந்தனர். இவை அனைத்தும் கேரள சுற்றுலாத் துறைக்கு சுற்று லாப் பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைக் குறிக்கிறது. சாகச சுற்றுலா, சினிமா சுற்றுலா, கேர வன் சுற்றுலா மற்றும் பொறுப்பான சுற்றுலா போன்ற  புதிய வழிகளில் கேரளம் முன்னேறி வருகிறது. எந்தவொரு சமூகத்திற்கும் அமைதியான வாழ்க்கை மிக முக்கியமான விசயம். வகுப்புவாத மோதல்கள் அல்லது கலவரங்கள் இல்லாத ஒரு நிலையான சட்டம் - ஒழுங்கு நிலைமை மற்றும் அமைதியான சமூக வாழ்க்கை கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணைய குற்றங்களை விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த சிறந்த அறிவியல்ப்பூர்வமான விசாரணை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. நமது காவல் படையும் திறம்பட செயல்படுகிறது. போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக கேரளாவும் வலு வான பாதுகாப்பை வழங்கி வருகிறது. போதைப் பொருள் விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாட்டைத் தடுக்க கேரள காவல்துறை ஆபரேஷன் டி-ஹன்ட் என்ற செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2.5 லட்சம் பணி நியமனங்கள்

கேரள அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (பிஎஸ்சி) இந்தியாவில் அதிக நியமனங்களைச் செய்யும் பொது சேவை ஆணையமாகும். பிஎஸ்சி மூலம் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் நாற்பதா யிரம் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் சேவை மற்றும் பொதுத்துறை நிறுவனங்க ளில் லட்சக்கணக்கான பதவிகள் காலியாக உள்ள போது, இந்தியாவில் வேறு எந்த சிவில் சர்வீசும் கோர முடியாத இந்த சாதனையை கேரளம் படைத்துள்ளது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளி களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடிகளை  சமாளித்து முன்னேற்றம்

இந்த சாதனைகள் அனைத்தும் சாத்தியமானது என்று கூறினாலும், கேரளம் எதிர்கொண்ட சவால்க ளும் நெருக்கடிகளும் சிறியவை அல்ல. ஒருபுறம்,  ஒக்கி புயல், 2018 வெள்ளம், 2019 பருவமழை, கோவிட் தொற்றுநோய் மற்றும் சமீபத்தில் சூரல்மலை நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டோம். மறுபுறம், ஒன்றிய அரசின் அணுகுமுறையால் உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு கள் உள்ளன. ஒன்றிய அரசின் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் வரி வருவாயில் செய்யப்பட்ட வெட்டுக்கள் கேரள அரசின்  வருவாயில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடிகள் இருந்த போதிலும் நாம் முன்னேற முயற்சிக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கேரள அரசின் சொந்த வரி வருவாய் ரூ.47,000 கோடியிலிருந்து ரூ.81,000 கோடியாக அதி கரித்துள்ளதை காணலாம்.

நெருக்கடிகளை  வாய்ப்புகளாக மாற்றி...

கேரளத்தின் மொத்த சொந்த வருவாய் ரூ.55,000 கோடியிலிருந்து ரூ.1,04,000 கோடியாக அதிகரித்துள்ளது. பொதுக் கடனுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 36 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக மாறியுள்ளது. இருப்பினும், கடந்த நிதியாண்டில், மாநில அரசு செல வினங்களில் சுமார் 70 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டது. இந்த நிதியாண்டில் மொத்த செல வினத்தில் சுமார் 75 சதவிகிதத்தை மாநிலம் ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், கேரளாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.5.6 லட்சம் கோடியாக இருந்தது, ஆனால் இப்போது அது ரூ.13.11 லட்சம் கோடியாக அதி கரித்துள்ளது.  நெருக்கடிகளால் நாம் சோர்வடையவில்லை, மாறாக அவற்றை வாய்ப்புகளாக மாற்றி முன்னேறி வருகிறோம். இத்தகைய பின்னணியில், இடது ஜனநாயக முன்னணி நான்காவது ஆண்டு விழா நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்கள் கூட்டம், இடது ஜன நாயக முன்னணி அரசு தொடர்ந்து ஆட்சி செய்யும்  என்பதில் உறுதியாக உள்ளனர். கேரளம் என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமல்ல, அது நமது நிலமும் நமது மனமும் ஆகும். கேரளாவின் ஜோதி இப்போது பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அதை தொ டர்ந்து பிரகாசிக்க வைக்க வேண்டும் என்றும், புதிய கேரளம் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். அந்த விருப்பம் அர சாங்கத்திற்கு பெரும் பொறுப்பை வழங்குவதாகும். அதை ஏற்று அர்ப்பணிப்புடனும் சமரசம் இல்லாம லும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பயணிக்கும். தேசாபிமானி இணையப் பதிப்பில் இருந்து  தமிழில் : சி.முருகேசன்