election-2019

img

‘ஜெர்மானியர்களின் குற்ற உணர்வு நமக்கும் வந்து விடக்கூடாது’

பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ; இஸ்லாமிய, கிருத்துவ ராகவோ, சனாதன, தர்மத்தால்ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது.பாஜக மதவாத வெறுப்பரசியல் செய்துகொண்டிருக்கும் ஒரு நாச சக்தி. மிகவும் வெளிப்படையாக, பகிரங்கமாக அரங்கேறிக் கொண்டிருக்கும், வெட்ட வெளிச்சமாக கண்ணுக்கு தெரியும் இந்தச்செய்தியை, நாம் சத்தம் போட்டு, இதோ இப்படி கேவலமான அபாயமான விஷயம்இங்கு நம் கண்ணெதிரே நடந்து கொண்டி ருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதும், அப்படியெல்லாம் எங்கங்க நடக்குது என்று ஒரு கூட்டம் முட்டுகொடுப்பதும் விந்தையாகவே தெரிகிறது. காந்தியை கொலை செய்தவனை ஆதரித்து, அவனை தேசப்பற்றாளன் என்று சொல்லும் கட்சி இன்று தேசப்பற்று எனும் சொல்லுக்கு ஒட்டுமொத்த காப்புரிமை வாங்கியுள்ள கட்சியாக காட்டிக் கொள்கிறது. மோடியை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என்றே முத்திரை குத்துகின்றனர் மூலை சலவை செய்யப்பட்ட சில அப்பாவிகள். மக்களாகிய நாம் யோசித்து தெளிய வேண்டிய நேரம் இது.தேசம் என்பது வெறும்மண்ணல்ல. அது மனிதர்களின் கூட்டமைப்பு. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை யிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக மாட்டின் பெயரால் கொல்லப்பட்டவர்கள் எத்தனை என்று எண்ணிப் பாருங்கள். உரிமைக்காக போராடிய பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எண்ணிப் பாருங்கள். கொல்லப்பட்ட, காணாமல்போன சமூகநல ஆர்வாளர்கள், பத்திரி கையாளர்களை எண்ணிப் பாருங்கள். தலித்துகள் மீதும் சிறுபான்மையினர் மீதும் நடத்தப்பட்டுள்ள காவி வன் முறைகளை எண்ணிப் பாருங்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் இன்றுவரை ஹிட்லரின் இனவெறிக்கு நாமும் துணை நின்றோம் என்கிற குற்ற உணர்ச்சி ஜெர்மானியர்களுக்கு இருந்தே வருகிறது. அந்நிலை நமக்கு வந்துவிடாமல் இருக்க நாம் பாஜகவிற்கு ஓட்டு போடாமல்! சமூகநீதி நிலைக்க நம் வாக்கினை பதிவிடுவோம்.


இயக்குநர் நவீன்

;