சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பட்டப்பகலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வீடியோ பெரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடை தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்து. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து சேலம் பழைய பேருந்து அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாக்காளர்களிடம் நேரில் வாக்கு சேகரித்த போது நோட்டீஸ் உடன் சேர்த்து பணம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்கடுத்து ஒரு முதியவரின் காலில் விழுந்து ஆசி வாங்கும் முதல்வர் அவருக்கும் பணம் கொடுக்க அருகில் இருந்தவர்களை தேடுகிறார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுப்பது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.