election-2019

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

ஜெய்ப்பூர்: 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்ட பாஜக உறுப்பினரான மதன் லால் சைனி மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவார் என்று கட்சி அறிவித்தது.

அதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மன்மோகன் சிங் (86) ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தங்களுக்கு போதிய எண்ணிக்கை இல்லாத காரணத்தால் பாஜக வேட்பாளர் யாரையும் அறிவிக்கவில்லை. எனவே மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் திங்களன்று நிறைவடைந்த நிலையில், மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.