election-2019

img

சந்தேகம் சாமிக்கண்ணு - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் :- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்குவது குறைந்திருக்கிறது.


ச.சா - ஜி.எஸ்.டி.னு சொல்லி நாசமாக்கிட்டாங்களே.. பின்ன எப்படி வளரும்..??


முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- அதிமுக என்றும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது.


ச.சா - ஜெயலலிதா எதிர்த்த மக்கள் விரோத திட்டங்களுக்கு எல்லாம் தலையாட்டுனது உங்களோட எந்தக் கொள்கை..??


பாஜக தலைவர் அமித் ஷா:- 75வயது கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.


ச.சா - எடியூரப்பாவுக்கு விதிவிலக்கு தந்ததுக்கு என்ன காரணம்..??


தேர்தல் ஆணையம் :- பணபலத்தைத் தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.


ச.சா - ஆளுங்கட்சியத் தவிர.. அப்படித்தானே..!!?