புதுதில்லி:
ரிசர்வ் வங்கியானது, ஒற்றைப் படை மாதங்களில் (ஜனவரி, மார்ச், மே, ஜூலை,செப்டம்பர், நவம்பர்) நுகர்வோர் நம்பிக்கை சர்வே (Consumer Confidence survey) நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் நம்பிக்கை (Consumer Confidence Index) குறித்த சர்வே-யை ரிசர்வ்வங்கி நடத்தியுள்ளது.இதில், தற்போதைய பொருளாதார சூழல், வேலைவாய்ப்பு நிலை மற்றும் வருமானம் குறித்த நம்பிக்கை, 53.8 புள்ளிகளாக சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த நுகர்வோர் நம்பிக்கை குறியீடு, மேமாதத்தில், 63.7 புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது சுமார் 10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.தனித்தனியாக பார்த்தால், பொருளாதார சூழல் குறித்த நம்பிக்கை மே மாதம் மைனஸ்60.0 புள்ளிகளாக இருந்தது. ஜூலையில் மைனஸ் 65.9 புள்ளிகளாக சரிந்துள்ளது. வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை மைனஸ்48.3 புள்ளிகளிலிருந்து, மைனஸ் 65.1 புள்ளிகளாகவும், விலைவாசி குறித்த நம்பிக்கை மைனஸ் 75 சதவிகிதத்தில் இருந்து மைனஸ் 76.2 புள்ளிகளாகவும், வருவாய் குறித்த நம் பிக்கை மைனஸ் 40.8 புள்ளிகளிலிருந்து மைனஸ் 54.5 புள்ளிகளாகவும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை, சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்,அகமதாபாத், போபால், தில்லி, கவுகாத்தி,ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பட்னா ஆகிய நாட்டின் 13 நகரங்களில்- 5 ஆயிரத்து 342 குடும்பங்களிடம் சர்வே நடத்தி இந்தமுடிவை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்த செலவினம் உயர்ந்துள்ளது என்றாலும், தங்களின் விருப்ப செலவுகளை பெருமளவிற்கு குறைத்துக் கொண்டிருப்பதாக சர்வே-யில் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முழுமையுமே அத்தியாவசியமற்ற செலவுகளை மேற்கொள்வதில்லை என்ற முடிவில் இருப்பதாகவும் அவர்கள் குறிப் பிட்டுள்ளனர்.