election-2019

img

மோடியின் புதிய இந்தியா

விவசாயிகளுக்கு 

8வாய்க்கரிசி8 போடுவதுதான் 

புதிய இந்தியா


நெசவாளர்களுக்கு 

8சவத்துணி8 நெய்வதுதான் 

புதிய இந்தியா


சில்லறை வணிகர்களுக்கு 

8நெற்றிக்காசு 8 வைப்பதுதான் 

புதிய இந்தியா


மாட்டுக்கறி உண்பவரை 

கொன்று 

கொன்று 

8மனிதக்கறி 8 உண்பதுதான் 

புதிய இந்தியா


இல்லாதவனின் 

8கோவணத்தை பிடுங்கி8 

இருக்கிறவனுக்கு 

கம்பளம் விரிப்பதுதான் 

புதிய இந்தியா


மருத்துவ மனைகளில்

8மழலைகளின் மூச்சறுத்து8 

வீடுகளில் 

‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் 

புதிய இந்தியா


மாநில கல்வி உரிமை பறித்து 

சமூகநீதி புத்தகம் 8கிழித்து8 

உலக மூலதனத்துக்கு 

விசிறி விடுவதுதான்

புதிய இந்தியா


பெண்களின் 8தீட்டுத்துணிக்கும்8

வரி விதித்து 

பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து 

சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் 

புதிய இந்தியா


செத்துச் செத்துப் பிறக்கிறது 

புதிய இந்தியா 

பிறந்து பிறந்து சாகிறது 

புதிய இந்தியா


பழநிபாரதி

;