education

img

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பாக  சிறப்பு வேலை வாய்ப்பு  முகாம் - 73 பேருக்கு  வேலை 

கோவை,
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற  சிறப்பு வேலை வாய்ப்பு  முகாமில் 73 இளைஞர்கள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வனம் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில்  வழிகாட்டும் இலவச சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி   கோயம்புத்தூர் மதுரை  சென்னை புத்தூர் பெங்களூர் விஜயவாடா பூனா உள்ளிட்ட பல பகுதிகளில் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கீழ்க்கண்ட தலைப்புகளில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர் வர்த்தக உறவை மேம்படுத்துவது எப்படி?, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டெலி மார்க்கெட்டிங் விற்பனை திறன் வளர்த்தல்  மற்றும்  வேலைவாய்ப்புக்கான அனைத்து வழிமுறைகளும் சிறப்பு பயிற்சியாக ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
கோயம்புத்தூரில்   எஸ் என் ஜி  கலைக் கல்லூரி, டாக்டர் என் ஜி பி கலைக் கல்லூரி மற்றும் யுனைடெட் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்  ஆகிய கல்லூரிகளில் இந்த சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றது. பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும்  சிறப்பு வேலை வாய்ப்பு  முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல தொழில் நிறுவனங்களில்  வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை எஸ் என் ஜி கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6  நிறுவனங்களில் இருந்து வந்து  நேர்முகத் தேர்வு நடத்தி   பணிகளில் சேர்வதற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஹெச் ஆர் ஹெச் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தில் 30 பேரும் சூரிட்டி ஐஎம்எப் என்ற நிறுவனத்தில் 19 பேரும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் 4 பேரும் யுரேகா ஃபோர்பஸ் நிறுவனத்தில் 8 பேரும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் 9 பேரும் அச்சீவர்ஸ் லைவ் மெடிக்கல்ஸ் நிறுவனத்தில் 3 பேரும் ஆக மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  பணியில் சேர்வதற்கான பணி அணை வழங்கப்பட்டது.  
இதற்கான ஏற்பாடுகளை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் நீரார்த்தி லிங்கம்  ஒருங்கிணைத்தார்.  எஸ் என் ஜி கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோ, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கிரீஸ்  ஆகியோர் கலந்து கொண்டனர். 
இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநிலங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து குடும்ப வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் இலவச பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. எந்த மாநிலத்திலும் இளைஞர்கள் பணியில் சேரலாம். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.  இவை அனைத்து முற்றிலும் இலவச சேவை,  இதற்காக எந்தவிதமான  சேவை கட்டணமும் வசூலிப்பதில்லை  என்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.
 

;