education

img

ஆங்கிலம் கற்பது எளிதே

இந்த ஆங்கிலப் பயிற்சித் தொடரைப் ஆரம்பம் முதல் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது நன்கு புரியும். ஆமாம் ஆமாம் என்றும் Yes, Yes என்றும் நீங்கள் சொல்வது, எனக்குக் கேட்கிறது. நீங்கள் படிக்கும் போதும், எழுதிப் பழகும்போதும் வாய்விட்டுப் படிக்கிறீர்கள், சொல்லிக் கொண்டே எழுதுகிறீர்கள், எழுதியவற்றை நண்பர்களுக்கிடையே சரிபார்த்துக் கொள்கிறீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் ஆங்கிலத்தில், சிறு சிறு வாக்கியங்களையாவது பேச ஆரம்பித்திருப்பீர்கள். நீங்கள் ஆங்கிலம் பேசுவதைக் கேட்க நானும் வெகு ஆவலாக உள்ளேன்.
ஊர்ந்து செல்லும் கம்பளிப்பூச்சிதானே
அனைவருடைய மனதையும் கவரும் வண்ணம் பறந்து திரியும் பட்டாம்பூச்சியாகிறது?
சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு அனைவரும் கேட்டு இன்புறும் வகையில் அழகான ஆங்கிலத்தில் நீங்கள் அனைவரும் உரையாடவே இந்தக் குறிப்புகள் அனைத்தையும் தந்துள்ளேன்.
இதேபோல வாக்கியங்களை ‘Inspite of’, ‘Despite’ ஆகியவற்றைப் பயன்படுத்தியும் இணைக்கலாம். இதுபற்றி பின்னர் பார்க்கலாம். இப்போது கேள்விகள் எப்படி கேட்பது என்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் வினாச் சொற்கள் என்னென்ன உள்ளன? உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்.


When
What
Where
Why
How 
How much
How many
How long
Who
Very good. இதையெல்லாம் எழுதிவிட்டீர்களல்லவா? சரி. இவற்றைப் பயன்படுத்தி ஐம்பது வினாக்கள் எழுதியனுப்புங்கள். ஒரு முறை பயன்படுத்திய பெயர், ஒரு முறை பயன்படுத்திய வினைச் சொல் ஆகியவற்றை மறுமுறை பயன்படுத்தக் கூடாது. Whatsapp, Email. தபால் என எதில் வேண்டுமானாலும் எழுதியனுப்பலாம், உங்கள் சொந்தக்குரலில் Voice record செய்தும் அனுப்பலாம். ஆனால், கண்டிப்பாக எழுதியும் அனுப்ப வேண்டும். அப்போதுதான் நீங்கள் எழுதியதும், பேசுவதும் சரியா என்று பார்க்க முடியும்.


இப்போது either or neither nor பற்றிப் பார்க்கலாம். 
Neither Kasishra nor Subashree recorded the programme.
Programmeஐ Subashree, Karishra இருவருமே record செய்யவில்லை என்பது இதன் பொருள்.
Nishanthini went neither to the shopping mall nor to the beach.
நிஷாந்தினி mallக்கும் செல்லவில்லை. பீச்சுக்கும் செல்லவில்லை என்பதே இதன் பொருள்.
Neither mithun nor champer understood the subject.
Renu learnt neither Bharatanatyam nor Kuchupidi.
Neither Sasi nor Varshini participated in the competition.
இருவருமே பங்கேற்கவில்லை என்பதே இதன்பொருள்.
Neither Harini not Hari obeyed their parents.