education

img

நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு!

இளநிலை மருத்துவ படிப்புகளான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
2023-ல் மத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்று முதல் தொடக்கப்பட்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு ரூ.1700 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1600 ஆகவும், எஸ்சி/எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1000 ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி மற்றும் செயல்முறைக் கட்டணங்களையும் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.