education

img

NMMS தேர்வு விண்ணப்பம் - கால அவகாசம் நீட்டிப்பு!

புதுதில்லி,ஜனவரி.25- NMMS தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) ஒன்றிய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
2024-2025ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு(NMMS) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி கால அவகாசம் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.