சென்னை:
நிவர் புயல் காரணமாக யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது. இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நவ.27 முதல் டிச.2 வரை நடைபெறவிருந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னை அரும்பாக்கம் யோகா கல்லூரியில் நடக்கவுள்ள கலந்தாய்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.