education

img

TNPSC குரூப் - 4 தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை,ஏப்.25- குரூப் - 4 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
மேலும் இத்தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வின் மூலம், கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 2, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, இளநிலை உதவியாளர்(பிணையம்) 46, இளநிலை உதவியாளர் 11, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 என மொத்தம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.