education

img

குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL - அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் கண்டனம்

சென்னை,மே.02- குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் Fail ஆக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்
தேசிய கல்வி கொள்கையின் படி CBSE பள்ளிகளில் 3,5,8ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL ஆக்கும் நடைமுறை மே 1 முதல் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்களிடம் அனுமதி கடிதமும் பெறப்பட்டு வருகிறது.
இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; இந்த  நடைமுறையால், பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும், இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கே ஆபத்தானது. இதனால்தான் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறது எனக் கண்டனங்களைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் CBSE பள்ளிகளில் கையெழுத்து கேட்டால் போட மறுத்துப் பெற்றோர்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.