education

img

10,11ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்காலாம்!

சென்னை,மே.22- 10,11ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 11 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 4ஆம் முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வுகளுக்குப் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம், தனித் தேர்வர்கள் தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 
மேலும் விவரங்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.