மறு சீரமைப்பு செய்யப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 5%, 12%, 18%, 28% என 4 பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி, 5%, 18% என இரு பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
99% பொருட்கள் 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் உணவு, மளிகைப் பொருட்கள், வாகனங்கள், மின்சாதன பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் புகையிலை மற்றும் ஆடம்பர பொருள்களுக்கான ஜிஎஸ்டி 40%ஆக உயர்த்தப்பட்டுள்ளது