economics

img

வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.60 உயர்த்தியும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.115 உயர்த்தியும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், இன்று முதல் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.2,043.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் போர் காராணமாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என கூறி வந்த ஒன்றிய அரசு, இன்று சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலையை உயர்த்தியுள்ளது.