economics

img

அனில் அம்பானி மகன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

யூனியன் வங்கியில் ரூ.228 கோடி முறைகேடு செய்த குற்றசாட்டில் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோல் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறது.
அனில் அம்பானி தனது தொழில் தேவைகளுக்காக மும்பையில் உள்ள வங்கியின் SCF கிளையிலிருந்து ரூ.450 கோடி வரை கடன் வரம்பு பெற்றதாக புகாரில் கூறப்பட்டது.
நிதி ஒழுங்கை பின்பற்றி தவணைகளை நேரத்துக்கு செலுத்தல், வட்டி மற்றும் கட்டணங்களை சரியாக வழங்கல், பாதுகாப்பு நிலைமை மற்றும் பிற தேவையான ஆவணங்களை காலக்கெடு உள்ளடக்கத்தில் அளித்தல், வருவாய் அனைத்தையும் வங்கி கணக்கில் செலுத்தல் போன்ற நிபந்தனைகளை வங்கி விதித்திருந்தது. ஆனால், அந்த நிறுவனம் தவணைகளை செலுத்தத் தவறியதால், 2019 செப்டம்பர் 30ஆம் தேதி அந்த கணக்கு செயலற்ற சொத்து (NPA) என வகைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஏப்ரல் 1 முதல் 2019 ஜூன் 30 வரை காலகட்டத்துக்கான கணக்குகள் குறித்து கிராண்ட் தார்ன்டன் (GT) நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வில், பெற்ற பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதையும், நிதி வழிமாற்றம் நடந்ததையும் கண்டறிந்தது.
கடன் அளிக்கப்பட்ட நோக்கத்திற்குப் பதிலாக, பிற நோக்கங்களுக்காக நிதியை மாற்றி வைத்து, கணக்குகளை மோசடி செய்து, நம்பிக்கை மீறி பணத்தை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர் என்று வங்கி தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மோசடி குற்றச்சாட்டுகளின் தொடர்பாக வழக்கில் அனில் அம்பானியி, ஜெய் அன்மோல் அனில் அம்பானி மீது சிபிஐ கிரிமினல் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.