மும்பை : மக்கள் வங்கிகளில் காத்திராமல் சுலபமாகப் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் , கடந்த ஜூன் மாத இறுதி ஆய்வில் , நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் , சில நேரங்களில் ஏடிஎம்- ல் பணம் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. இந்த சிரமத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி , ஏடிஎம்- ல் பணம் இல்லாத வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.
ஒரு மாதத்தில் பத்து மணி நேரத்துக்கு மேல் ஒரு ஏடிஎம்- ல் பணம் இல்லாமல் இருந்தால் ஒரு அந்த வங்கிக்கு ,மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் , இந்த நடவடிக்கை அக்டொபேர்- 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.