சென்னை, நவ.29- சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்த இரு பெண்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளி நாட்டுப் பணத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சினேகா (30), சங்கீதா (28) ஆகிய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையின் டிஆர்ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சங்கீதா, சினே காவை அதிகாரிகள் பின்தொடர்ந்த னர். ஒரு பெண்ணின் வீடு பல்லா வரத்தில் மற்றொரு பெண்ணின் வீடு குரோம்பேட்டையில் இருந்த நிலையில், இரு பெண்களின் வீடு களிலும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மறைத்து வைக் கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், தங்க உருளைகள், தங்கப் பசைகள் போன்ற வற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இருவரது வீடுகளில் இருந்தும் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.இதுகுறித்து, இந்தப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் தங்கம் கை மாறும் விதம் குறித்து தெரியவந்தது. துபாயில் இருந்து சென்னை வழி யாக இலங்கை செல்லும் பயணிகள் விமானங்களில் கடத்தி வரும் தங்கத்தை விமான நிலையத்தில் அவர்கள் வாங்கிக் கொள்வர். அவற்றை தங்களுடைய உள்ளாடை களுக்குள் மறைத்து, சுங்கச் சோதனைகள் எதுவும் இல்லாமல் வீடுகளுக்கு எடுத்து வந்து விடுவர். அதன்பின், கடத்தல் கும்பல் ஆட்கள் வந்து அந்த தங்கத்தையும் வெளிநாட்டுப் பணத்தையும் பெற்றுச் செல்வர் என்பதும் அதற்காக இப்பெண்களுக்கு கணிசமான அளவில் பணம் தரப்பட்டது தெரிய வந்தது. அவர்கள் கூறியது போல், பெண்கள் இருவரிடம் இருந்து தங்கத்தை வாங்கிச் செல்வதற்கு முக மது ஹர்ஷத் என்ற கடத்தல் ஆடவர் வந்தார். அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன், வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலையரசன் வீட்டில் சோதனை நடத்தியபோது, 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர். முகமது ஹர்ஷத், கலையரசனும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெளிநாட்டுப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.