districts

மதுரை விரைவு செய்திகள்

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு விலை உயர்வு பாமாயில் விலை சற்று குறைவு

விருதுநகர், மே 21- விருதுநகர் மார்க்கெட்டில் மசூர் பருப்  பின் விலை கடந்த வாரத்தை விட குவிண் டால் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை உயர்ந்துள்ளது. அதேவேளை, பாமாயில் விலையானது சற்று குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியா வசிய உணவுப் பொருட்களான எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள், வத்தல், மல்லி உள்ளிட்டவை வாரந்தோறும் விலை நிர்ண யம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த வாரம் (15 கிலோ) ரூ.2530-க்கு விற்பனை செய்யப்  பட்டு வந்த பாமாயிலின் விலை தற்போது ரூ.2460-க்கு விற்கப்பட்டது. டின் ஒன்றுக்கு ரூ.70 வரை பாமாயில் விலையானது குறைந்திருந்தது. இந்தியா முழுவதும் பாமாயிலானது பெருமளவு வெளி நாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படு கிறது. பின்பு, அவற்றை பெரு நிறுவனங் கள் சுத்திகரிப்பு செய்து சந்தையில் பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின் றன. அந்த வகையில் இறக்குமதி அதி கரித்த காரணத்தால் பாமாயில் விலை யானது குறைந்து வருவதாக வியாபாரி கள் பலர் தெரிவித்தனர். ஆனால், கடலை எண்ணெய் விலை ரூ.2800, நல்லெண்ணெய் விலை ரூ.4702 என கடந்த வாரம் விற்கப்பட்ட அதே விலை யில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், கடந்த வாரம்( 50 கிலோ) ரூ.2300க்கு விற்கப்பட்ட எள் புண்ணாக்கு ரூ.50 குறைத்து ரூ.2250க்கு இந்த வாரம் விற்கப்படுகிறது. மேலும், பட்டாணி பருப்பின் விலையா னது (100கி) கடந்த வாரத்தை விட ரூ.50 குறைந்து ரூ.5650க்கு விற்கப்படுகிறது. வெள்ளை பட்டாணி பருப்பு ரூ.100 குறைந்து ரூ.6600க்கு விற்பனை செய்யப்படு கிறது. சந்தைக்கு உள்நாட்டில் உற்பத்தி யான பட்டாணி வகைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளதே இதற்கு காரண மாகும். இதேபோல், உளுந்து விலையும் கணி சமான அளவு குறைந்துள்ளது. குறிப்பாக 100 கிலோ நாட்டு உளுந்து கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்து ரூ.6600க்கும், லயன் உளுந்து ரூ.300 குறைந்து ரூ.6800க்கும் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், மசூர் பருப்பு பருவட்டு (100 கிலோ) ரூ.500 உயர்ந்துள்ளது. கடந்த  வாரம் ரூ.9200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மசூர் பருப்பானது திடீரென ரூ.9700க்கு விற்கப்படுகிறது. உடைத்த மசூர் பருப்பா னது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.9700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடலூர் நிலப்பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

உதகை, மே 21- நீலகிரி மாவட்ம், கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலப்பிரச்சனை குறித்து அமைச்சர்கள், அதிகாரி களுடன் ஆலோசித்து, ஒரு குழு அமைத்து உடனடி யாக இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 9500 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 34 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்க ளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உயரமான பசுமையான எழில்கொஞ்சும் பல்வேறு சிறப்பு கள் உள்ள உதகைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 124 மலர் கண்காட்சியை வெள்ளியன்று துவக்கி வைத்தேன், முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியை பார்வையிட்டேன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளர். குறிப்பாக, முதல் முதலாக அரசுப் பேருந்துகளை நாட்டுடமை யாக்கியபோது, அதற்கான திட்டத்தை உதகை யில்தான் துவக்கி வைத்தார். அதேபோல் இங்குள்ள ஏரிகளை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கினார். முதுமலை புலிகள் காப்பகத்தை   விரிவுபடுத்தியது, இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது தாயகம் திரும்பியவர்களை காப்பாற்ற 1970  ஆம் ஆண்டு பந்தலூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் அவர்களை குடியமர்த்தினார். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக டேன் டீ என்ற கழகத்தை உருவாக்கி வேலை வாய்ப்புளை வழங்கி னார். இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்களை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தினார். இதேபோல், இந்த அரசும் இயற்கையும், மனி தனும் இணைந்து வாழும் வகையில் பல திட்டங்களை செய்யும். இப்போது உள்ள 20 சத விகித வனப்பரப்பை 33 சதவிகிதமாக உயர்த்த வழிவகை செய்யப்படும். முதுமலை பகுதியில் அதி நவீன விலங்குகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்  படும். மேலும், விவசாயத்தை ஊக்குவிக்க, விவ சாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த, விளை பொருட்களை சேமித்து வைக்க பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும். அதேபோல், சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அரசின் எல்லா உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலப்பிரச்சனை குறித்து சென்னை சென்றதும் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரிடம் பேசி ஒரு குழு அமைத்து உடனடியாக இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.  இதேபோல், கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட இடங்கள் அடங்கிய நீலகிரி பிளான் ஏரியா 1 என்று அறிவித்து நீலகிரியை பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்படும். நீலகிரியை  பாதுகாத்தால் தமிழகத்தை பாதுகாப்பது போல் இருக்கும். இது  திராவிட மாடல் அரசு, இது அனைத்து தரப்பினரை யும் அரவணைத்து செல்லும். இவ்வாறு முதல்வர் பேசினார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசஷ், மாவட்ட ஆட்சி யர் சா.ப.அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இன்றைய நிகழ்ச்சி

ஈகியர் சென்னி-மணியம்மை மன்றம் சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம்: இடம்:மணி யம்மை பள்ளி, வடக்குமாசி வீதி,மதுரை. ஞாயிறு காலை  10 மணி. கருத்துரை: மருத்துவர் இரேவதி கயிலைராசன்.

மடப்புரம் கோவில் உதவி ஆணையர் பொறுப்பேற்பு 

சிவகங்கை, மே 21- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்  தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திர காளியம்மன்  கோவில் உதவி ஆணையராக வில்வமூர்த்தி  பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் பாஸ்கரன்,அலுவலக ஊழியர்கள்  உள்  ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

வரதட்சணைக்கேட்டு தாக்குதல்  கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு

இராமேஸ்வரம், மே 21- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் தாம ரைக்குளம் அடுத்துள்ள இரட்டையூரணி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகன் கர்ணன்(38). திருவாடானை தாலுகா சி.கே.மங்கலம் கிராமத்தை சேர்ந்த அழகு என்பவ ரது மகள் அன்சுயா(35). இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு வாரத்தில் கர்ணன் அமெரிக்கா சென்றுவிட்டார்.  இந்நிலையில், வீட்டில் இருந்த மாமனார்.மாமியார், உடன் பிறந்தவர்கள் அன்சுயாவை தேவையற்ற வார்த்தை களால் பேசியுள்ளனர். இதனால் அவர் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.  இதனைத் தொடர்ந்து, கர்ணன் அமெரிக்காவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி வீடு திரும்பி யுள்ளார். கணவன் வந்து விட்டது குறித்து அன்சுயாவுக்கு 17 ஆம் தேதி தெரியவந்துள்ளது. மனைவி அன்சுயா கண வர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கணவன் கர்ணன், அவ ரது தந்தை, தாய், தம்பி, தங்கை ஆகியோர் அவதூறாகப்  பேசி தாக்கி உள்ளனர். மேலும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் 100 சவரன் நகை, மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இராமேஸ்வரம் அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் வரதட்சணைக் கேட்டு கொடு மைப்படுத்துவதாக அன்சுயா புகார் தெரிவித்துள்ளர்.  காவல்துறையினர் விசாரணை நடத்தி, கர்ணன், தங்கை அன்னலட்சுமி,தம்பி சரவணன்,தந்தை ராக்குமுத்து, தாய் ஜானகி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் ரவுடிகள்,  சமூக விரோதிகள் 58 பேர் கைது

மதுரை, மே 21- சமூக விரோத செயல் மற்றும் குற்றச் செயல்பாடு களை கட்டுப்படுத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் டி.செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் ரவுடிகள் 18, கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் -2 மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் -4 ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும்  தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்ப தற்காக 333 நபர்களிடமும் 106 நபர்களிடமும் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. அதில் நன்னடத்தை பிணை யத்தை மீறிய 58 நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்  ளனர். ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருவில்லிபுத்தூருக்கு  புதிய ஆணையாளர் 

திருவில்லிபுத்தூர், மே 21- திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த டி.மல்லிகா செங்கல்பட்டிற்கு இடமாற்றம் செய்யப்  பட்டார். இதைத்தொடர்ந்து குளச்சலில் பணிபுரிந்து வந்த என். இராஜமாணிக்கம் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணை யாளராக வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக்கொண் டார். புதிய ஆணையாளருக்கு நகர்மன்றத் தலைவர், மேலா ளர் உள்ளிட்டோர் வரவேற்பளித்து, வாழ்த்துக்களை தெரி வித்தனர்.

4 பேர் தற்கொலை வழக்கு காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

திருவில்லிபுத்தூர், மே 21- விருதுநகர் பாண்டியன் நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு அப்போது விருதுநகரில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. பல முறை சம்மன் அனுப்பி யும் ஆஜராகாததால் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திற்கு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். ஆய்வாளர் சண்முகசுந்தரம் தற்போது ஊட்டியில் பணிபுரிந்து வருகிறார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு மக்கள் கோபத்தால் ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுதில்லி, மே 21- பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்ட ருக்கு 8 ரூபாயும், டீசல்மீதான வரியை லிட்ட ருக்கு 6 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு  உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும்,  டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்தது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் சர்வதேச விவகா ரங்கள் என சாக்குப்போக்கு கூறி  ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை  நாள்தோறும் உயர்த்தி வந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் டிராவல் நிறு வனம் நடத்தி வருவோரும் அரசுப் போக்கு வரத்துக் கழகங்களும் பெரிதும் பாதிக்கப் பட்டன. டீசல் விலை உயர்வால் வாகனங்க ளில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலை  கடுமையாக உயர்ந்தது.  காய்கறி கள், பழங்கள், பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். சரக்கு போக்குவரத்து கட்ட ணங்களும் அதிகரித்தன.இந்த விலை உயர்வால் மக்கள் மத்தியில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோபமும் கொந்த ளிப்பும் எழுந்தது.  பெட்ரோலிய பொருட்களின் விலை யைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடி வரு கின்றன. தமிழகத்திலும் ஒருவார கால  போராட்டம் நடத்த இக்கட்சிகள் அறிவித்தி ருந்த நிலையில் ஒன்றிய  அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான  கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்ட ருக்கு 7 ரூபாயும் குறையும்’’ என நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  வரி குறைப்  பால்  ஒன்றிய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும்  அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பி னும் எரிபொருள் விலை அதிகமாகத்தான் உள்ளது.

மக்களைப் பற்றி கவலைப்படாமல் அகங்காரத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு

இரா.முத்தரசன் கடும் தாக்கு

சாத்தூர், மே 21- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலை உயர்வு பற்றி சிறிதும் கவலைப்  படாமல், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசானது,   அகங்காரத்துடன் செயல்பட்டு வருகிறது என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாகச் சாடியுள்ளார். சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற 12 ஆவது மாநில  மாநாட்டில் கலந்து கொண்ட அவர், செய்தி யாளர்களிடம் மேலும் கூறியதாவது: விலைவாசி உயர்வைக் கண்டித்து மே 25 முதல் 31 ஆம் தேதி வரை இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய கண்டன  இயக்கம் நடைபெற உள்ளது. ஆனால்,   ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வீட்டிற்கான சமையல் எரிவாயு விலை, வர்த்தக சிலிண்டர் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது மிகக்  கடுமையான கண்ட னத்துக்குரியதாகும். இந்தநாடு  ஜனநாயக நாடு தானா? எனக் கேட்கும் அளவிற்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  விலையை குறைக்க வேண்டும் என பலர்  கோரிக்கை வைத்து வரும் நிலையில்,  மேலும் விலை  உயர்வை அறிவித்திருப்பது பாஜக அரசின் அகங்காரத்தை காட்டுகிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதனைக் கண்டித்து  மே., 26, 27 தேதி களில் தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சி கள் மற்றும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கள் இணைந்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்றார். மேலும் பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல  என்ற பாஜக தலைவர் அண்ணாமலை யின் கருத்து குறித்த கேள்விக்கு, மாநில அரசினுடைய தீர்மானங்களை ஆளுநர் மதிக்கவில்லை. அதுதான் முக்கிய பிரச்  சனை. இதை உச்சநீதிமன்றம் கடுமை யாக விமர்சனம் செய்துள்ளது. இந்த பிரச்ச னையை திசை திருப்பும் முயற்சியாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். தண்டனை காலத்திற்கும் அதிகமாக சிறையில் இருப்பவர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசு மற்றும் பேரறிவாளன் குடும்  பம் சட்டரீதியாக மேற்கொண்ட முயற்சி களை ஆளுநர் மதிக்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பை  நாம் வரவேற்கிறோம்.   கோவை குண்டு வெடிப்பில் கைதான வர்கள்  விடுதலை செய்யப்படுவார்களா? என  காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கூறிய கருத்துக்குறித்து கேட்டபோது, விசா ரணை இல்லாமல் பல ஆண்டுகளாக விசா ரணை கைதிகளாக இருக்கும் இஸ்லாமி யர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பல முறை வலியுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி நடத்திக்  கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தின் அங்கமான பாஜகவானது, தந்தை பெரி யார், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், கேரளாவைச் சேர்ந்த சமூக சேவகர் நாராய ணகுரு குறித்த பள்ளி பாடங்களை அகற்றி  விட்டு,  அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலை வர்களின் வரலாறு குறித்த பாடங்களை இணைக்க ஏற்பாடு செய்துள்ளது.   வருங்காலத்தில் காந்தி குறித்த பாடத்தையும் எடுத்து விடுவார்கள். உக்ரை னில்  இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்லூரி களில் சேர்த்து அவர்களது படிப்பை தொடர்ந்திட ஒன்றிய அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தார்.

குறுந்தகவல் அனுப்பி விமான நிலையத்தில்  வேலை வாங்கித்தருவதாக ரூ.7லட்சம் மோசடி

தேனி, மே 21- விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர்கள்  மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போடி அருகே மேலசொக்கநாத புரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராஜலட்சுமி. இவரது செல்போனுக்கு ஏர்  போர்ட் பணிக்கு அவசரம் என  குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தொடர்பு கொண்டு பேசிய போது ,அந்த நபர் தான் ஏர்போர்ட் அத்தாரிட்டியில் மெக்கானிக் பிரிவில் பணி புரிவதாக கூறி வேலைக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லும்படி தெரிவித்துள் ளார் . இதனைத் தொடர்ந்து தனது மகன் வசந்தகுமாருக்கு அந்த வேலையை வாங்கி தருமாறு தெரிவித்துள்ளார் .அதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த வங்கி கணக்கு களில் பல்வேறு தவணைகளில் ரூ 7,18,001 செலுத்தியுள்ளார்.  எனினும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உதகை 200 - ஜான் சல்லிவன் வெண்கல சிலை திறப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

உதகை, மே 22- 200 ஆண்டுகளுக்கு  முன்பு உதகை நகரை கண்டறிந்து கட்ட மைத்த ஜான் சல்லிவனை நினைவு கூரும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ள வெண்கலச் சிலையை முதல்  வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.  ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சி யராக பணிபுரிந்தார். இவரால் 1819 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டு பிடிக்கப்பட்டது. இயற்கை சுற்றுச்சூழ லில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான்  சல்லிவன் இந்த பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் ஏராளமான குடி யேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்த பகு திக்கு சென்றுவர 1820 ஆம் ஆண்டு  சிறுமுகையில் இருந்து ஒரு புதிய  தரைவழிப் பாதையையும் ஏற்படுத்தினார்.  பின்னர், ஐரோப்பிய, தென் னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டு, ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப் பெரிய ஏரியையும் உருவாக்கினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரி யுடன் இணைத்து அதன் நீர் வளத்தை உறுதி செய்தார். இதன்பின் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜான் சல்லிவன் 1841 ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்று,இங்கி லாந்து திரும்பினார். 1855 ஆம் ஆண்டு  தனது 66 ஆம் வயதில் காலமானார்.  இந்நிலையில், 200 ஆண்டு களுக்கு முன்பு ஊட்டியை கட்ட மைத்த பெருமைக்குரிய ஜான் சல்லி வனை நினைவுகூரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா  சாலையில் அவரது மார்பளவு  வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள் ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், ஜான் சல்லிவன் வாழ்க்கை வர லாற்றை ஆராய்ந்து புத்தகமாக தொகுத்த நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்ம லிங்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன் னாடை அணிவித்து கவுரவித்தார்.

புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி  பணம் பறிக்கும் நிதி நிறுவனம் தேனியில் வழக்குப் பதிவு 

தேனி, மே 21- மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். தேனியில் பெரியகுளம் சாலையில் புத்தக கடை நடத்தி வருகிறார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பண  தேவை காரணமாக ,ஸ்பீட் லோன் செயலி மூலம் விண்ணப்  பித்து ரூ.6 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார் .பின்னர் அந்த  பணத்தை அதே செயலி மூலம் திருப்பி செலுத்தியுள்ளார் .இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கடனை திரும்ப செலுத்தவில்லை என கேட்டு வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி  வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகைப்படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து அனுப்பிய நபர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை செலுத்தாவிட்டால் எல்லோருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். பயந்த ராஜேஷ்குமார் ,ரூ 8400 ஐ அனுப்பியுள்ளார் .அந்த பணமும் கிடைக்கவில்லை என கூறி வேறு ஒரு லிங்கிற்கு பணம் அனுப்பும்படி மார்பிங் செய்த படங்களை அனுப்பி  மிரட்டியுள்ளனர் .இது தொடர்பாக தேனி மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் ராஜேஷ்குமார் புகார் அளித்தார்.அதன் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தங்க.தமிழ்செல்வன் மீது அவதூறு பரப்பிய யூ டியூபர் மீது வழக்கு பதிவு 

தேனி, மே 21- திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன் மீது அவதூறு செய்தி வெளியிட்ட யூ டியூபர்  மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியை சேர்ந்த தங்க. தமிழ்செல்வன் அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் என பதவி வகித்தவர். தினகரன் அமமுக கட்சி ஆரம்பித்த பின் அவரு டன் இணந்து பணியாற்றி ,கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைத்துக்கொண்டார். தற்போது திமுக  தலைமை அவருக்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளது .இந்நிலையில் திமுகவில் மாநிலங்க ளவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் மூவர் அறிவிக் கப்பட்ட நிலையில் ,திமுகவிலிருந்து விலகி விட்டதாக தனி யார் யூ டியூப் சேனல் அவதூறு பரப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து தங்க.தமிழ்செல்வன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசா ரணை நடத்திய தேனி காவல்துறையினர் தனியார் யூ டியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.




 

;